ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் ஆர்த்தி விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் மாறியுள்ளது. ரவி மோகன் தனது குடும்பத்தை பிரிய காரணமே கேனிஷா தான் என்று சமூக வலைத்தளங்களில் பேசி வந்தனர்.
பிரம்மாண்ட சொகுசு பங்களாவை கெனிஷாவுக்கு வாங்கி கொடுத்த ஜெயம் ரவி!! அதன் விலை மட்டும் இத்தனை கோடியா?
அறிக்கை
இந்நிலையில் ரவி மோகன் சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நாடு ஒரு பெரிய சமுதாயப் பிரச்சினையை எதிர்கொண்டும் நிலையில், என் தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைத்தளங்களில் பேசுவது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. என் மௌனத்தை பலவீனமென எடுத்துக்கொள்ள வேண்டாம்.. ஆனால் என் நேர்மையை அறியாதவர்கள் கேள்விக்குள்ளாக்கும் போது, நான் பேச வேண்டும்.
நான் என் வாழ்க்கையை ஊக்கமும் கடின உழைப்புமாக கட்டியெடுத்துள்ளேன். எனது கடந்த கால திருமணத்தை வைத்து யாரும் பொய்யான பிரபலத்திற்காக அல்லது பரிதாபத்திற்காக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். இது ஒரு விளையாட்டு இல்லை.
சட்டபடியான நடவடிக்கைக்கு நான் முழுமையாக உறுதிபூண்டுள்ளேன். மேலும் அது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.
கஷ்ட்டப்பட்டேன்..
ஒரு மனிதனாக, பல வருடங்களாக உடல், மன, உணர்ச்சி,நிதி போன்றவற்றையால் கஷ்ட்டப்பட்டேன். நான் என் சொந்த பெற்றோர்களை கூட சந்திக்க முடியாமல் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கையில் இருந்தேன்.என் திருமணத்தை காப்பாற்ற ஒவ்வொரு உண்மையான முயற்சியும் இருந்தபோதிலும் தாங்க முடியாத ஒரு சுழலில் சிக்கிக்கொண்டேன்.
நான் என் குடும்பத்தினரிடம், நெருங்கிய நண்பர்களிடம், என் ரசிகர்களிடம் ஏற்கனவே என்னுடைய முடிவுகளைப் பகிர்ந்துள்ளேன். என் முன்னாள் மனைவியின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், யாரும் ஊகிக்கவோ குற்றம் சுமத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். என் குழந்தைகள் நிம்மதியான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று கூறியுள்ளார்.