ராஷ்மிகா:
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் கலக்கி வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட படங்களில் நடித்து வந்த இவர், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படம் தெலுங்கில் வெளியானாலும் தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த ராஷ்மிகா, கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை பெற்றது. தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கியுள்ள குபேரா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
புஷ்பா 2..
கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனையை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சம்பளம்;
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், புஷ்பா 2 படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. மேலும் புஷ்பா 2 படத்திற்கு பின் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நபராக ராஷ்மிகா இருக்கிறார் என்று கூறப்படுவது குறித்து கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு பதில் அளித்த ராஷ்மிகா மந்தனா, இதை தான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் அதில் உண்மை இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
புஷ்பா 2 படத்திற்காக ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா, புஷ்பா 2 படத்திற்காக ரூபாய் 10 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்று இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.



