பிரியங்கா
விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி தொடங்கினாலும், தொகுப்பாளராக முதலில் நினைவுக்கு வருபவர் பிரியங்கா. சூப்பர் சிங்கர் போன்ற பாட்டு நிகழ்ச்சிகளில் இவரது தொகுப்பு மற்றும் நகைச்சுவை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. இவரது தனித்துவமான உடல் மொழி மற்றும் சாமர்த்தியமான பேச்சு, நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன.
பிரியங்கா, தொகுப்பாளராக மட்டுமல்லாமல், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அதை திறமையாகப் பயன்படுத்தி, தனது முத்திரையைப் பதிப்பவர் இவர்.
பிரியங்கா கடந்த 2016ம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.. ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த சூழலில் பிரியங்கா டிஜே வசி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், விஜய் டிவியில் பணியாற்றி வரும் பிரியங்கா அதே நிறுவனத்தில் தயாரிப்பாளராக இருந்த சாதிக் என்பவரை திருமணம் செய்துகொண்டாராம். அதன் பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
பிரியங்காவின் நகைச்சுவை பாணி, “சிரித்துக்கொண்டே விஷ ஊசி செலுத்துவது” போன்றது என்று ரசிகர்கள் வர்ணிக்கின்றனர். இது, இவரது தனித்துவமான கலை எனக் கருதப்படுகிறது. விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு இவரது தொகுப்பு பெரும் டி.ஆர்.பி. மதிப்பீடுகளைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒரு நிறுவனத்தில் அதிக வருமானம் தரும் நபருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கமான நடைமுறை என்பதால், பிரியங்காவின் புகழ் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பிரியங்காவின் புகழுக்கு இடையே, சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. விஜய் டிவியில் மற்ற தொகுப்பாளர்களான விஜே சித்ரா, பவானி போன்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இது தொலைக்காட்சி துறையில் பொதுவான போட்டியின் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது. விஜய் டிவி, வருமானத்தை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதால், பிரியங்காவின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது.
சிலர், விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானவை என்று விமர்சிக்கின்றனர். ஆனால், வணிக நோக்கில், ரசிகர் வரவேற்பு மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகின்றன. இதில், பிரியங்கா உள்ளிட்ட தொகுப்பாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் என்று பயில்வான் கூறியுள்ளார்.
சர்ச்சை
பிரியங்கா முதலில் பிரவீன் என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில், தற்போது சாதிக் என்ற இஸ்லாமியரையும் திருமணம் செய்துள்ளதாக பயில்வான் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பலரும் பயில்வானை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.