பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அந்தணன், சினிமாவில் நடக்கும் பல விஷயங்களை குறித்து பேசி பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசுகையில், டிராகன் மற்றும் நிலவுக்கு என்னடி என்மீது கோபம் இரண்டு படங்கள் மீது எனக்கு எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக 2கே கிட்ஸ்களுக்கு பிடித்த மாதிரி படத்தை எடுப்பது ரொம்ப கஷ்டம். ஆனால் இந்த இரண்டு திரைப்படத்தின் இயக்குனர் அதை சரியாக வடிவமைத்து உள்ளனர். இணைக்கு கல்லூரியில் கெத்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை துளைத்துவிட்டு இருக்கிறார்கள். வாழ்க்கை என்பது அது கிடையாது. படத்தின் பர்ஸ்ட் ஆப் பார்க்கும் போது என்னடா படம் இந்த மாதிரி போகுது, பசங்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள் ..என்ன பண்ண போறாங்க என்று யோசித்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் திருப்பி கொண்டு சென்று , பிரமாதமாக முடித்தார் அந்த இயக்குனர். இது தான் இயக்குனரின் கடமை..கல்லூரியில் கெத்து காட்ட வேண்டும் என்ற நினைப்பில் வரும் பசங்களுக்கு இந்த படம் ஒரு பாடமாக இருக்கும்.
அது போல நிலவுக்கு என்னடி என் மீது கோபம் படமும் அப்படி தான். படத்தை ஜாலியா வந்து பாருங்க என்று தனுஷ் சொல்லிவிட்டார். படமும் அப்படி தான் போகுது. மேல் தட்டு பசங்கள் இப்போது எப்படி இருக்காங்க அந்த மாதிரி கொஞ்சம் ஜாலியா படம் எடுக்கலாம் என்ற முடிவில் தனுஷ் அப்படி எடுத்திருப்பார். ஆனால் படத்தில் பெரிய கருத்து ஒன்றும் இல்லை.
ஏன் தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன் சின்ன சின்ன இடையூர்களை பார்க்க கூடாது. இப்போது தான் வளர்ந்து வருகிறார். ஆனால் அவருக்கு சினிமாவில் பெரிய நெருக்கடி கொடுத்ததாக நான் இன்னும் கேள்வி படவில்லை. சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த இடைஞ்சல் பிரதீப் ரங்கநாதனுக்கு வரவில்லை. இது தான் உன்மை. ஏன் அதை பெரிய விஷயமாக பிரதீப் மேடையில் அப்படி பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் பிரதீப்-க்கு இதை விட பெரிய இடத்திற்கு செல்வார் என்று நம்பிக்கை இருக்கிறது.
விஜய்யின் கோட் படத்தை முதல் முதலில் இயக்கவிருந்தது பிரதீப் ரங்கநாதன். AGS நிறுவனம் தயாரிப்பில் உருவான அந்த படத்தை அவர் இயக்கவிருந்தார். சினிமாவில் நான் இப்போது நடிகராக மாறியிருக்கிறேன். கோட் படத்தை இயக்கி முடிக்க எனக்கு இரண்டு வருடங்கள் மேல் ஆகிவிடும் என்று விஜய் படத்தை நிராகரித்தார் பிரதீப் ரங்கநாதன் என பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.