கோமாளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தற்போது பிஸி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரதீப் ரங்கநாதன் பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஸ்டாராக வேண்டுமென்று ஆசை படுகிறேன். திரையரங்குகளில் என்னுடைய படத்தை பார்த்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி படம் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு இருக்க வேண்டும்.
ட்ராகன் மற்றும் லவ் டுடே போன்ற படத்தில் சில சமூக கருத்துக்களை சொல்லி இருக்கிறோம். பெரும்பாலும் பொழுது போக்கு அம்சங்களை தான் கொண்டு இருக்கும். ஒரு விஷயத்தை எப்படி சொல்வது. அதே பொழுது போக்கு அம்சங்களுடன் எப்படி சொல்வது பர்ஸ்ட் ரூல்.
தமிழ் சினிமா மட்டும் இல்லை, எல்லா துறையும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையும் வித்தியாசமாக ஐடியா இருக்கும் . அதற்கு தகுந்த மாதிரி நம்மளும் கற்றுக்கொண்டு வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும்.
ட்ராகன் படம் வெளியாகுவதற்கு முன்பு என்னுடைய விடை தாள் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறேன். அதனால் விடை தாளில் கொஞ்சம் கதை எழுதி வைத்து இருந்தேன். அந்த விடை தாளை திருத்திய ஆசிரியர், கதை நன்றாக இருக்கிறது. நீ சினிமாவில் படம் பண்ணுங்க என்று அதில் எழுதி இருந்தார்.
சினிமாவில் நடிகராக இருக்கும் போது மக்களுடைய அன்பு ரொம்ப அதிகமாக இருக்கும். அது எனக்கு ரொம்ப புடித்து இருக்கிறது. நாம் பேசுவதை ரசிப்பது, திரையில் நம்மளை கொண்டாடுவது அது போன்ற விஷயங்கள் மிக புடித்து இருக்கிறது .
2015ம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே சினிமாவில் போக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. பலரும் தங்களின் ப்ரோஜெட்களை வெளிய கொடுத்து செய்தார்கள். ஆனால் நான் படங்களுக்கு சப் டைட்டில் கொடுக்கும் ப்ராஜெக்ட் ஒன்றை செய்து முடித்து இருந்தேன். அதிகமாக படங்கள் பார்ப்பேன். சினிமா மீது இருந்த ஆர்வத்தில் அந்த ப்ராஜெக்ட் செய்து முடித்தேன். ஆனால் இப்போதய காலகட்டத்தில் யூடியூப்பில் சப் டைட்டில் வர ஆரம்பித்துவிட்டது .
அனுபமா நடித்த ப்ரேமம் திரைப்படம் நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது படம் வெளிவந்தது. அவர்கள் கூட நடிப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ரொம்ப cute ஆ இருந்தாங்க, அருமையாக நடித்து இருந்தார்கள். அதே மாதிரி Kayadu Lohar படத்திற்காக ரொம்ப தயார் செய்துகொண்டார். படம் வெளியாக்குவதற்கு முன்பே அவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. சினேகா மேம் ரசிச்சு பார்த்துக்கொண்டே இருந்தேன். அது அவங்க கிட்ட இருந்த அனுபவம் என்று பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.