நரிவேட்டை
சேரன் – டொவினோ நடிப்பில் இயக்குனர் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் உருவான நரிவேட்டை திரைப்படம் நேற்று தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியானது, கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற அபின் ஜோசப் இதற்கு திரைக்கதை எழுதி இருந்தார். மேலும் இந்த படத்தில் பிரியம்வத கிருஷ்ணா, ஆர்யா சலீம், ரினி உதயகுமார் எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். தற்போது இந்த எப்படி இருக்கிறது என்பது குறித்துப்பி பார்க்கலாம்..
28 Degree Celsius படத்தின் திரைவிமர்சனம்!!
கதைக்களம்
பி.எஸ்.சி தேர்வை எழுதி, வேலைக்காக காத்திருக்கும் ஒரு சாதாரண இளைஞனான வர்கீஸ், குடும்ப நிலைமையின் அழுத்தத்தால் போலீஸ் வேலைக்கு இணைக்கப்படுகிறார். காவல்துறையில் சேர்ந்த அவருடைய வாழ்க்கை, வயநாட்டில் பரபரப்பாக நடைபெற்ற ஆதிவாசி நிலப் போராட்டத்துடன் இணைந்தவுடனே புதிய திருப்பத்தை எடுக்கிறது. மக்களுக்காக போராட்டத்தை கையில் எடுத்த வர்கீஸ் இதில் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் மீதி கதை.
கதை பற்றிய அலசல்:
படத்தின் இரண்டாம் பாதி மிகவும் தாக்கம் செய்யக்கூடியதாகும். அரசியல், சமூக நியாயம், மனித உரிமைகள் ஆகியவற்றை பேசும் விதத்தில் படம் நகர்கிறது. டொவினோவும், சேரனும் அவரவர் கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
சினிமாட்டோகிராபி படத்திற்கு கூடுதல் பலத்தை தருகிறது. , இசை படத்திற்கு உயிர் கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த வகையில் பின்னணி இசை அமைந்து இருந்தது.
நெகடிவ்:
படத்தின் முதல் பாதி அதிக நீளமானது அதனால் கொஞ்சம் சலிப்பு தட்டியது.
இன்னும் கொஞ்சம் திரைக்கதையை படத்தில் சிறப்பாக கொண்டு இருக்கலாம்.
Ratings : 7/10