சமந்தா
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சமந்தா. இப்படத்திற்கு பின் தெலுங்கு சினிமாவில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.
இதனை அடுத்து நாக சைதன்யா நடிகை சோபிதா உடன் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்தார். தற்போது இவர்களின் நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களின் திருமணம் தேதி குறித்து தகவல்களை விரைவில் அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.
சர்ச்சை
சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் அமைச்சரான கொண்டா சுரேகா, ‘நடிகை சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு KT ராமா ராவ் தான் காரணம் என்று தெரிவித்து இருந்தார். இவருடைய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நடிகர் நாகர்ஜுனா, “உங்கள் அரசியலுக்காக சினிமா நடிகை நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர்கள் privacyக்கு மதிப்பு கொடுங்கள். இப்படி பொய்யான குற்றச்சாற்று வைத்திருப்பது சரியில்லை . உங்கள் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சூழல் பிரபல தெலுங்கு நடிகர் நானி, “எப்பேர்ப்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளை பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது.இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னாள் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளை பேசுவது சரியல்ல நமது சமூகத்தை மோசமாக பிரதிபலிக்கும் இந்த செயலை கண்டிக்க வேண்டும்” என்று நானி பதிவிட்டுள்ளார்.