சமந்தா
இந்திய அளவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழில் அறிமுகமான சமந்தா தெலுங்கிலும் தனது திறமையை நிரூபித்தார். அதனால் நிறைய பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. தென்னிந்திய சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர ஜோடியாக இருந்த இவர்கள், சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்துகொண்ட இவர்களின் பிரிவுக்கு பல யூகங்கள் சொல்லப்படுகின்றன.
திருமணம்..
சமந்தா உடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் படத்தில் கதாநாயகியாக நடித்து சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வந்தார். நீண்ட நாட்களாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.
சர்ச்சை..
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் அமைச்சரான கொண்டா சுரேகா, நடிகை சமந்தா பற்றி சர்ச்சையாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதில் அவர், சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு KT ராமா ராவ் தான் காரணம். KTR செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே சென்றுவிட்டார்கள் என்று சுரேகா தெரிவித்து இருக்கிறார்.
இவர் பேசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்த பலரும், சமூக வலைத்தளங்களில் அமைர்ச்சர் சுரேகாவை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும் சமந்தாவுக்கு ஆதரவாக திரைபிரபலங்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கண்டனம்..
இந்த நிலையில் சமந்தாவின் முன்னாள் மாமனாரும், தெலுங்கு நடிகருமான நாகர்ஜுனா தற்போது சுரேகா வின் பேச்சுக்கு எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், “உங்கள் அரசியலுக்காக சினிமா நடிகை நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். அடுத்தவர்கள் privacyக்கு மதிப்பு கொடுங்கள். இப்படி பொய்யான குற்றச்சாற்று வைத்திருப்பது சரியில்லை . உங்கள் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.