ட்ராகன்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ராகன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தில் மிஸ்கின், கே.எஸ் ரவிக்குமார், கவுதம் வாசுதேவ் மேனன், அனுபமா பரமேஸ்வரன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ட்ராகன் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது. இதில் திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய மிஸ்கின், நான் இந்த மேடையில் எந்த ஒரு கெட்ட வார்த்தை பேசமாட்டேன். நான் மேடைகளில் கலந்துகொள்ள கூடாது என்று நினைத்தேன். ஒரு வருடம் எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் மூன்று நபருக்காக தான் வந்தேன். அகரம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் என்னை எப்போதும் மகனாக தான் பார்த்தார். என்னுடைய படங்கள் அவருக்கு ரொம்ப பிடிக்கும். நான் எடுத்த படங்கள் சிறந்த படங்கள் என்று என்னை பாராட்டுவர். அன்புக்கு இந்த படம் மிக பெரிய படமாக இருக்கும்.
பிரதீப் ப்ருஸ் லீ மாதிரி. இதுவரை அவர் எந்த சண்டை படங்கள் பண்ணல, ஒரு வேலை என்னுடன் பண்ண நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. பிரதீப் இளம் ஸ்டாராக இருக்கிறார். இந்த இடத்திற்கு வரும் யாரும் உதவி செய்யவில்லை. தன்னுடைய கடின உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளார். அடுத்த படமும் பெரிய வெற்றி பெரும். ட்ராகன் படத்தில் அவருக்கு நான் தான் வில்லன், நல்ல வில்லன். எங்களுக்கு இடையே நல்ல நிறைய பேசுவோம். அவர் உண்மையில் இயக்குனர் உடன் நட்பாக இருப்பார். இன்றைக்கு இந்த மாதிரி நடிகர்கள் இல்லை. நாலு படம் பண்ணும் போது ஈகோ வந்துவிடும், அதன் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வார்கள். உயரம் இல்லாமல் இரண்டு அடி வளர்ந்துவிடுவார்கள், 200 கூடவே வருவார்கள். ஆனால் பிரதீப் ரொம்ப தாழ்மையாக நடந்துகொண்டார். இப்படி பெருமையாக பேசினால் அடுத்த படத்திற்கு ஐஸ் வைக்கிறேன் என்று சொல்வார்கள். எனக்கு படம் எல்லாம் கொடுக்க வேண்டும்.
இந்த ஒரு இளம் வயதில் ஸ்டாராக மாறிவிட்டார் . இது தொடர்பாக என்னுடைய உதவி இயக்குனர்களிடம் சொல்லுவேன், ஆனால் அவர்கள் நம்ப மாட்டார்கள். இன்னும் அவர் பெரிய இடத்திற்கு போக வேண்டும். 200 வருடம் வாழ வேண்டும் மிஸ்கின் கூறினார்.
மேலும் அந்த நிகழ்ச்சியில், நான் சினிமாவை விட்டு மிக விரைவில் சென்றுவிடுவேன். அந்த எண்ணத்தில் இருக்கிறேன் என்று மிஸ்கின் எமோஷனலாக பேசியுள்ளார். தற்போது இவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.