Wednesday, March 4, 2026

இயக்குநர் மிஸ்கினின் பேச்சுக்கு பிரபல நடிகர் கண்டனம்!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் மிஸ்கின். இப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் மிஸ்கின் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சமீபத்தில் மிஸ்கின் பாட்டில் என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டார். அந்த மேடையில் சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசினார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதற்கு நடிகர் அருள் தாஸ் பதிலடி கொடுத்து இருந்தார். அதில் அவர், மிஸ்கின் மேடையில் பேசிருந்தது மிகவும் மோசமாக அநாகரிகமாக இருந்தது. அப்படி எல்லாம் பேசணும் என்ற அவசியமே இல்லை. இயக்குனர் என்றால் என்ன வேணாலும் பேசலாமா? வீடியோவை எனக்கு தலைகுனிவாக இருந்தது. மேடையில் பெண்கள், எல்லாரும் இருக்கிறார்கள் அப்படியா பேசுவது.
குறைஞ்சபட்சம் அறிவு கூட இல்லையா?நீ என்ன பெரிய அறிவாளியா? நீயே படத்தை காப்பி எடுத்து தான் எடுக்குற என்று அருள் தாஸ் பேசியிருந்தார்.

தற்போது பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அருள் தாஸ் , எனக்கு மிஸ்கின் மீது தனிப்பட்ட கோபம் கிடையாது. மேடையில் மோசமாக பேசியதனால் நான் தெரிவித்த கண்டனம் தான் அது. மேடையில் இருந்தவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும். மிஸ்கின் பல பேச்சுக்களை நான் கேட்டு இருக்கிறேன். வளர்ந்து வரும் நடிகர்,நடிகைகள், இயக்குனர்களை ‘வாடா போடா போடி’ என்று சாதாரணமாக பேசுகிறார். ஆனால் அது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். அவுங்க மனசு கஷ்டத்தை ஏற்படுத்தும். மது அருந்துவது அவர்களின் தனிப்பட்ட விஷயம் ஆனால் ஒரு பொது மேடையில், குடிங்க குடிச்சிட்டு படம் பாருங்க, படம் பாத்திட்டு குடிங்க என்று சொல்வது தவறான விஷயம். மிஸ்கின் பேச்சை கேட்டு மிகவும் மனம் வருத்தமாக இருந்தது. நிறைய இயக்குனர்கள் மண் சார்ந்த படங்களை எடுக்கிறார்கள் ஆனால் மிஸ்கின் வெளிநாட்டு படங்களை காப்பி அடிக்கிறார். அவ்ளோ வெளிநாடு படங்களை பார்க்கும் அவர் கொஞ்சம் நாகரிகமாக நடந்துகொள்ள மாட்டாரா? என்பது என்னுடைய கேள்வி.

அவர் கலந்துகொண்ட பாட்டில் படம் மது ஒழிப்பை சார்ந்த படம்.ஆனால் மிஸ்கின் அங்க சென்று குடியின் பெருமை பேசுகிறார். அப்போது இந்த தலைமுறைக்கு மதுப்பழக்கம் பாஸிட்டிவாக சென்று விடும். மிஸ்கின் குறித்து நான் பேசியும் நிறைய பேர் என்னை அழைத்தார்கள், ஏன் அண்ணா எல்லாத்தையும் போட்டு ஒடைச்சிட்டீங்க என்று சொன்னார்கள்.

மேலும் மிஸ்கின், பாலாவை அநாகரிகமாக பேசினார். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர், தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குனர் தான் பாலா. அவர் அப்படி பேசிய மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாரதிராஜா யாரையும் அப்படி பேசியதில்லை. மேடைகளில் அப்படி பேசியதும் இல்லை. படம் நல்ல இருந்தால் பாராட்டி தீர்த்துவிடுவார். மிஸ்கின் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று அருள் தாஸ் தெரிவித்து உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles