மைனா:
பிரபு சாலமோன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான மைனா திரைப்படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படத்தில் ஹீரோவாக விதார்த் நடித்திருப்பார். ஹீரோயினாக அமலா பால் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, சூசன், சேது எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தார்.
மைனா படத்தில் போலீசாக நடித்த நடிகரின் சேது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
நொடிக்கு நொடி திகில்.. மிரளவைக்கும் டாப் 10 ஹாரர் படங்கள்.. லிஸ்ட் இதோ!!
போஸ்டர்:
இந்நிலையில் தற்போது இவர் மையல் என்ற திரைப்படத்தில் கதாநாயகனா நடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்டர் படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த போஸ்டரில் சேது ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.




