Mission: Impossible
பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸின் Mission: Impossible – Dead Reckoning Part Two திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது இப்படம் குறித்து பார்க்கலாம்..
Final Destination: Bloodlines (2025): – திரைவிமர்சனம்
திரைக்கதை
ரஷ்யா கண்டுபிடிக்கும் என்டிடி (Entity) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி, உலக நாடுகளின் ரகசியங்களை பறிக்கவும், சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்தவும் சக்தி வாய்ந்தது.
இந்த கருவி, எந்த ஒரு பாதுகாப்பு முறையையும் சாய்க்க முடியும். அணு ஆயுதங்கள் முதல் ரகசிய ராணுவ திட்டங்கள் வரை—அனைத்தும் இதில் சிக்கிக்கொள்ளும். யாரிடம் இது இருக்கிறதோ, உலகத்தின் எதிர்காலம் அவர்களது கையில். இந்த என்டிடி செயற்கை நுண்ணறிவு கருவி கண்டுபிடிக்க MI ஏஜெண்ட் ஈத்தன் ஹண்ட் (டாம் குரூஸ்) முயற்சி செய்கிறார். பல்வேறு நாடுகள், வில்லன்கள், அந்த கருவியை கைப்பற்ற பல தரப்பிலிருந்து முயற்சி செய்கிறார்கள். கடைசியில் செயற்கை நுண்ணறிவு கருவியை கண்டுபிடித்தார்களா?இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படம் குறித்த அலசல்:
படத்தின் தொடக்கத்தில் கதை சிறிது மெதுவாகவே நகர்கிறது. ஏனெனில் முந்தைய பாகங்களில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை, குறிப்பாக “Part 7” என்றழைக்கப்படும் Dead Reckoning Part 1-ல் நன்கு விளக்கமளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிரடியான ஸ்டண்ட் சீன்கள், திகிலூட்டும் சப்மேரின் மற்றும் அண்டர்வாட்டர் எபிசோட்கள், கதையை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றன.
டாம் குரூஸின் ஈத்தன் ஹண்ட் கதாபாத்திரம் வழக்கம்போலவே செம்ம ஈர்ப்புடன் உள்ளது. படம் முழுவதும் அவருடைய முயற்சி, சாகசம், சகிப்புத் தன்மை போன்றவை பிரமிப்பூட்டுகின்றன.
அண்டர்வாட்டர் மற்றும் சப்மரின் காட்சிகளை அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளன. அவை பார்வையாளர்களுக்கு திகில், வியப்பு அடைய வைக்கிறது. படத்தின் பின்னணி இசை, குறிப்பாக மிஷன் இம்பாசிபிள் பிராண்டுக்கு சொந்தமான ஐகானிக் பீட், ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்துகிறது.
படத்தின் இரண்டாம் பாதி தொடங்கும் இடத்திலிருந்து, கதை மிக வேகமாக, அனுபவ ரீதியாக உயர்நிலைக்கு சென்றுவிடுகிறது. பிளேன் ஸ்டண்ட்கள், ரன் சீன்கள், பைக் சேஸ்கள் போன்றவை மெய்சிலிர்க்கச் செய்கின்றன.
இந்தப் படத்தை முழுமையாக உணர, Part 7 (Dead Reckoning Part 1)–ஐ பார்த்துவிட்டுத்தான் Part 8–ஐ (Dead Reckoning Part 2) பார்க்க வேண்டும். ஏனெனில், கதை தொடர்ச்சியாக நகரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பாசிட்டிவ்:
ஸ்டண்ட் சீன்கள்
டாம் குரூஸின் அர்ப்பணிப்பு.
இசை மற்றும் டார்க் மொமென்ட்ஸ்.
சப்மரின்/அண்டர்வாட்டர் கிளைமாக்ஸ்.
நெகடிவ்:
தொடக்கத்தில் மெதுவான கட்டமைப்பு.
முந்தைய பாகங்களைப் பார்க்காதவர்களுக்கு குழப்பம் ஏற்பபடுத்தும்.
Ratings : 7.5/10