Monday, March 2, 2026

விடுதலை 2ல் நடிக்க மஞ்சு வாரியருக்கு இத்தனை கோடி சம்பளமா?

மஞ்சு வாரியர்

மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் பிரபல நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதன் பின் சில மலையாள படங்களில் நடித்து வந்த மஞ்சு வாரியர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மிக பெரிய வெற்றியை அடைந்தது. மேலும் இப்படத்தில் மஞ்சு வாரியார் வெளிப்படுத்திய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த வேட்டையன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை:

காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலமாக ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் பெரும் பொருட் செலவில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் வாத்தியார் கேரக்டருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். இப்படம் வருகிற டிசம்பர் 20ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

விடுதலை முதல் பாகம் முழுவதும் சூரியின் குமரேசன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி நகர்ந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரின் இளமை பருவ கதாபாத்திரம் இடம்பெறுவதால், அவர்கள் இருவரையும் டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி இளமையாக காட்டி இருக்கிறார் வெற்றிமாறன்.

சம்பளம்:

விடுதலை 2 திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை மஞ்சு வாரியரின் சம்பளம் விவரம் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, விடுதலை 2 படத்தில் நடிக்க அவருக்கு ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது . இதற்கு முன்பு இவர் நடித்த வேட்டையன் படத்தில் நடிக்க ரூபாய் 2 கோடி சம்பளமாக வாங்கிய நிலையில் தற்போது விடுதலை 2 படத்துக்காக ஒரு கோடி கூடுதலாக வாங்கி இருப்பதாக இணையத்தில் பேசப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles