தெலங்கானா அமைச்சர் சுரேகா, சமந்தா – நாக சைதன்யா விவாகரத்திற்கு காரணம் கேடி ராமராவ் தான் என்று கூறியிருந்தார். இவருடைய பேச்சு பெரும் சர்ச்சை கிளப்பியது . இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தமிழா தமிழா பாண்டியன் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார்.
அதில் அவர், ஒரு நடிகை பிரபலமாக மாறினால் இயற்கையாகவே அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் நட்பு இயற்கையாகவே வந்துவிடும், உதாரணத்திற்கு சமந்தாவுக்கு நிறைய பணம் வந்து இருக்கும், அப்படி பணம் கிடைத்த பின்பு நிலம் அப்பார்ட்மெண்ட், திராட்சை தோட்டம் என அனைத்தையும் வாங்கிகுவித்து விடுவார்கள். இதை எல்லாம் பாதுகாக்க ஒரு அரசியல் பாதுகாப்பு தேவைப்படுகிறது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகனான கேடி ராமராவுடன் தொடர்பு ஏற்படுகிறது. இவர்களின் தொடர்பு தொடர்ந்து சென்றுகொண்டு இருந்தது.இதனால் தனது கணவருக்கு தெரியாமல் தொடர்பில் இருந்தார். சொத்துக்களை பாதுக்காக்க தான் அவருடன் நட்பில் இருந்தார்.
தெலங்கானா அமைச்சர் சுரேகா, அரசியல் நோக்கத்திற்காக குடும்பத்தை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் இப்படி சொல்லி இருக்கிறார். ஆனால் அதில் உண்மை இல்லை. சமந்தாவிடம் கேடி ராமராவுடனான நட்பை துண்டிக்க சொல்லியும் அதை கேட்டுக்கொள்ளாத காரணத்தால் தான் விவாகரத்து நடந்தது என்றுதமிழா தமிழா பாண்டியன் கூறியுள்ளார். தற்போது இவருடைய பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து இருக்கிறது.