கராத்தே கிட் லெஜண்ட்
நடிகர் ஜாக்கி ஜான், ரால்பே இணைந்து நடித்துள்ள கராத்தே கிட் லெஜண்ட் திரைப்படம் கடந்த மே 30ம் தேதி உலக அளவில் வெளியானது. இப்படத்தை ஜோனதன் இயக்கியிருந்தார். தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க..
ஒரு பொம்மையால் தூண்டப்படும் மரணங்கள்.. தி மங்கி – திரைவிமர்சனம்!!
கதை சுருக்கம்:
“லீ” என்பது ஒரு இளைய வயதுடைய சிறுவன். குங்பூவுக்கு மிகுந்த ஆர்வம் கொண்ட அவன், ஜாக் ஜானிடம் கற்றுக்கொள்கிறான். ஆனால், அவனது இந்த ஆர்வம் அவரது தாயின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தவில்லை.
இந்த பயத்தை மனதில் கொண்டு, லீயை வன்முறையிலிருந்து விலக்க வேண்டும் என்பதற்காக அவனை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல தீர்மானிக்கிறார். அமெரிக்க சென்ற பிறகு லீ சந்திக்கும் பிரச்சனைகள் சண்டைகள் படத்தின் மீதி கதை.
படம் பற்றிய அலசல்:
படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள், பார்வையாளர்களை சிறிது விறுவிறுப்பில் வைத்தாலும், சில முக்கியமான பகுதிகள் விரைவாக நகர்த்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன. குறிப்பாக, கடைசி கராத்தே டூர்னமென்ட் காட்சிகள், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தவில்லை என்று சொல்லலாம்.
அதே நேரத்தில், கதாநாயகனின் குடும்ப பாசத்தையும், அண்ணனுடன் இணைந்த நினைவுகளையும் மிக நுட்பமாகத் திரையிடப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. குறிப்பாக ஜாக்கி சானின் சில ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகள் பழைய நினைவுகளை நினைவூட்டுகிறது.
நெகடிவ்:
படத்தை பெரிய எதிர்பார்ப்புகளுடன் சென்று ஏமாற்றமாக அமையும்..
திரைக்கதையை இன்னும் சுவாரசியமாக கொண்டு சென்று இருக்கலாம்..
Ratings:
6/10