ஜேசன் சஞ்சய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் இயக்குனர் அவதாரம் எடுத்து இருக்கிறார். அவர் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
ட்ராப் ஆகிறதா?
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், ஜேசன் சஞ்சய் ஜேசன் சஞ்சய் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது, படம் ட்ராப் ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வந்துகொண்டு இருந்தது ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை. ஜேசன் சஞ்சய் மாமா பெரிய தொழில் அதிபர் அந்த படத்தின் பர்ஸ்ட் காப்பிக்கு பெரிய தொகை கொடுத்து உதவி சசெய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன், இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் இல்லை. இந்த சூழலில் படத்தின் பட்ஜெட் அதிமாக இருக்கிறது. ஜேசன் சஞ்சய் புதுமுக இயக்குனர் தான். அவரும் எந்த ஒரு இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை. குறும்படத்தை மட்டுமே இயக்கி இருக்கிறார். விஜய்யுடையமகன் என்பதால் பெரிய பட்ஜெட் கொடுத்துவிட முடியாது. தெலுங்கு படங்களில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவரை யாருக்கும் அவ்ளோ தெரியாது. தனுஷின் ராயன் படத்தின் மூலமாக தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். அப்படி இருக்கும் போது அவரை நம்பி 25 கோடி எப்படி போட முடியும்? லைக்கா அது செய்தால் பெரிய அவர்களுக்கு தான் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும்.
இயக்குனர் ஷங்கரின் இயல்பு என்னவென்றால் ஒரு ஷாட் கூட படத்தின் தயாரிப்பாளருக்கு போட்டு காட்டமாட்டார். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் இது தொடர்பாக என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். நான் படத்தை எடுத்தேன் ஆனால் எனக்கே படத்தை போட்டு காட்டவில்லை என்று தயாரிப்பாளர்கள் வேதனை அடைந்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது அப்படியே மாறிவிட்டது.
இந்தியன் 2 படம் பிரமாண்டமாக உருவானதாக சொன்னார்கள். இந்தியன் படத்தை மிஞ்சும் அளவுக்கு இரண்டாம் பாகம் இருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தின் அதிக நேரம் இருப்பதால் மூன்றாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. இதனால் படத்தில் இருக்கும் நல்ல காட்சிகள் இந்தியன் 3 படத்திற்கு போய்விட்டது. இதுவே இரண்டாம் பக்கத்திற்கு தோல்வியாக அமைந்தது. இந்தியன் 2 படத்தை காட்டிலும் மூன்றாம் பாகம் வெற்றி படமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது அதுமட்டுமின்றி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் படம் வெற்றிக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.