Wednesday, March 4, 2026

ஐடியா கொடுதேன் குப்பை’ன்னு தூக்கி எறிவாரு!! இசையமைப்பாளர் இளையராஜா ஓபன் டாக்..

இளையராஜா

பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் இளையராஜா. எந்த அளவுக்கு புகழ் உச்சத்தில் இருக்கிறாரோ அந்த அளவுக்கு பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

பேட்டி

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல இளையராஜா, பல தகவல்கள் பகிர்ந்துள்ளார். அதில் அவர், பள்ளிப் படிப்பு முடிஞ்சு போச்சு, இனி என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சேன். ஆனா, இசை என்னைத் தேடி வந்து, இப்போ உலகமே என்னைத் தேடுது. சின்ன வயசுல புல்லாங்குழல் வாசிக்கப் பழகினேன். வீட்டுல இருக்கிற பொருட்களை எடுத்து ஓட்டை போட்டு, சுருதி வருதான்னு பார்த்திருக்கேன். அப்போ எனக்கு இசைன்னா என்னன்னு கூட தெரியாது, பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, கையில் சில நாள்களுக்கு மட்டுமே பணத்துடன் சென்னைக்கு வந்தேன், தற்செயலாக சினிமாவில் இணைந்தேன். முதலில் ஜிகே வெங்கடேஷ் அண்ணாவோட அசிஸ்டன்ட்டா சேர்ந்தேன். அவர் பாட்டு போடும்போது, ‘இதை இப்படி பண்ணா நல்லா இருக்கும்’னு ஐடியா சொல்லுவேன். சில சமயம் எடுத்துப்பாரு, சில சமயம் ‘குப்பை’ன்னு தூக்கி எறிவாரு.

ஒரு பாடலை யார் பாடுவது என்பது இயக்குநர்களின் முடிவா, இல்லை தானே தீர்மானிப்பதா என்ற கேள்விக்கு , “பெரும்பாலும் இயக்குநர்கள் தான் சொல்வாங்க. ஆனா, சில சமயம் நானே முடிவு பண்ணியிருக்கேன். ’16 வயதினிலே’ படத்துல ஒரு பாட்டை நானே பாடினேன். அது ஒரு தற்செயல் தான்,”

பாடல் பதிவு நாளன்று யார் பாட வேண்டுமென்பது ஸ்கோரைப் பார்த்து தெரியும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி போன்ற பாடகர்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தார். “ஒரு பாட்டு டூயட்டா எடுக்கணும்னு முடிவு பண்ணா, டியூன் ஓகே ஆன உடனே அவங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணுவாங்க. அவங்க வந்து பாடுவாங்க.

தேடும் செம்பந்தி பூவும், தென்றல் வந்து தீண்டும் போதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதை வேற யாரு பாடினாலும் அந்த எஃபெக்ட் வராது. ‘தென்றல் வந்து’ பாட்டுல ஒவ்வொரு முறையும் தீண்டிக்கிட்டே இருக்கற மாதிரி ஒரு உணர்வு இருக்கு. மற்றொரு பாடலான ‘ஜனனி ஜனனி’ பாடல் அது முதல்ல ஜெயசுதாஸ் பாடுறதா இருந்தது. ஆனா, பட பூஜைக்கு முதல் நாள் நைட் 12 மணிக்கு கம்போஸ் பண்ணி முடிச்சப்போ, அவர் ஊர்ல இல்லை. ‘நானே பாடுறேன், பிறகு அவர் வந்து மிக்ஸ் பண்ணிக்கலாம்’னு சொல்லி பாடினேன். அப்போ ட்ராக் எடுக்கற பழக்கம் இல்லை. புதுசா முயற்சி பண்ணி பார்த்தோம். ‘ஜனனி ஜனனி’ பாட்டு பதிவு முடிஞ்சப்போ, வாசிக்கிறவங்க, கேட்கிறவங்க எல்லாம் அழுதாங்க. இன்ஜினியர் கூட எழுந்து வந்து, ‘சார், பாட்டு சூப்பர்’னு சொன்னாரு. அது ஒரு தெய்வீக உணர்வு. அம்மனோட அருள்னு நினைக்கிறேன்.

“சில பாடல்கள் கதை இல்லாமலே பிறந்திருக்கு. ‘காக்கி சட்டை’ படத்துக்கு முதுமலை காட்டுல மூணு நாள் கம்போஸ் பண்ணோம். காலையில ஆரம்பிச்சு, மதிய சாப்பாட்டுக்குள்ள ஆறு பாட்டு முடிஞ்சு போச்சு. இயக்குநர் ராஜசேகர் வந்து, ‘இந்த ஆறு பாட்டையும் ஒரே படத்துல வைக்கலாம்’னு சொன்னாரு,”எளிய மக்களோட மொழி எனக்கு இயல்பா வந்துரும். ‘காக்கி சட்டை’ல ஒரு வார்த்தை அப்படி போட்டது ரசிகர்களை ரொம்ப கவர்ந்துச்சு,” என்றார்.

மேலும் அவர் பேசுகையில் ‘தளபதி’ படத்தில் மணிரத்னம் சார் அந்த இடத்துல ஹீரோயின் இன்ட்ரோக்கு ஒரு பிட்டு வேணும்னு சொன்னாரு. தேவாரம் தெரிஞ்ச அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு, ‘குனித்த புருவமும்’னு செட் பண்ணி, கோரஸோட பதிவு பண்ணோம். அது பாட்டுக்கு ஒரு தனி உணர்வைக் கொடுத்துச்சு,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

“இசை எனக்கு கடவுள் கொடுத்த வரம். புல்லாங்குழலோட ஆரம்பிச்சு, இப்போ சிம்பொனி வரைக்கும் வந்திருக்கேன். எல்லாமே இறைவன் அருள் தான்,” என்று நெகிழ்ந்தார்.என் மீது எழும் விமர்சனங்கள் குறித்து நான் கவனிப்பதில்லை என்றும் இளையராஜா கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles