இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கும் தமிழ் டப்பிங் படங்களில் மற்றும் தொடர்களை குறித்து பார்க்கலாம் வாங்க..
ஹார்ட் டே (A Hard Day) – பிரைம் வீடியோ
IMDb மதிப்பீடு: 7.2
கதைக்களம்: ஒரு ஊழல் செய்யப்பட்ட டிடெக்டிவ், தனது தவறுகளை மறைக்க முயல்கிறார். ஆனால், ஒரு நபர் அவரது ரகசியத்தைக் கண்டுபிடிக்க, கதை பரபரப்பாக மாறுகிறது.
இந்த படம் கொரியன் க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
தி பேட் கைஸ்: ரன் ஆஃப் கைஸ் – YouTube
IMDb மதிப்பீடு: 6.2
கதைக்களம்: கைதிகளை மாற்றும் பணியில், அவர்கள் தப்பிக்க, ஒரு சிறப்பு குழு அவர்களைப் பிடிக்க முயல்கிறது. டான்லி நடித்த இந்த ஆக்ஷன் படம், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.
ஆக்ஷன் படங்களை விரும்புவோருக்கு YouTube-ல் இலவசமாகப் பார்க்கலாம்.
டியர் ஹாங்ரங் (Dear Hangrang) – Netflix
2025 (11 எபிசோடுகள், தமிழ் டப்பிங்)
கதைக்களம்: ஒரு மீடிவல் காலகட்ட கதை. ஒரு குடும்பத்தின் வாரிசு மர்மமாக மறைந்து, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தோன்றுகிறார். ஆனால், அவர் உண்மையில் யார்? என்ன நடந்தது என்று படம் விறுவிறுப்பாக நகர்கிறது.
வரலாற்று டிராமா மற்றும் மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தொடர்.
வொர்க்கிங் மேன் (The Working Man)
கதைக்களம்: ஜேசன் ஸ்டேதம் நடித்த இந்தப் படத்தில், ஒரு எளிய கட்டுமானத் தொழிலாளி, ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயல்கையில் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
ஜேசன் ஸ்டேதம் ரசிகர்களுக்கு ஒரு ஆக்ஷன் ட்ரீட், ஆனால் புரொடக்ஷன் தரம் சற்று குறைவாக உள்ளது.
பெட் (The Bet) – Netflix
2025 (10 எபிசோடுகள்)
IMDb மதிப்பீடு: 5.5
கதைக்களம்: ஜப்பானிய பள்ளியில் நடக்கும் சூதாட்டம் சார்ந்த கதை. நம்பமுடியாத அளவு விறுவிறுப்பான காட்சிகள், ஆனால் சற்று ஓவராக உள்ளது.
சற்று வித்தியாசமான கதைக்களம் விரும்புவோருக்கு முயற்சிக்கலாம்.