Thursday, September 18, 2025

From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!

from

லாக்டவுனுக்கு பிறகு பலரும் உலக சினிமாவை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக த்ரில்லர் ஹாரர் படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. தற்போது (from)ஃப்ரம் என்ற தரமான வெப் தொடரை பற்றி பார்க்கலாம்..

டூரிஸ்ட் ஃபேமிலி – திரைவிமர்சனம்:

கதை சுருக்கம்!!

அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் நுழையும் எவரையும் சிக்க வைக்கிறது. அந்த இடம் மிகவும் மோசமான இடமாகும், அங்கு குடியிருப்பாளர்கள் சிக்கியுள்ளனர் மற்றும் உயிர்வாழ போராட வேண்டும். இரவு நேரத்தில் சுற்றியுள்ள காடுகளில் இருந்து பயங்கரமான பேய்கள் வெளியே வரும், அந்த நேரத்தில் மக்கள் வெளியே வந்தால் கொடூரமாக கொன்றுவிடும்.

பகலில் மக்கள் அங்கு இருந்த தப்பிக்க முயன்றால், மீண்டும் மீண்டும் அந்த டவுனுக்கு வந்துவிட்டார்கள். இந்த பிரச்சனையில் இருந்து மக்கள் எப்படி வந்தார்கள், மீண்டும் அவர்களின் சொந்த வீட்டுக்கு திரும்புவர்களா என்பதே இந்த தொடரின் கதை..

திரைக்கதை

அமெரிக்காவில் அம்மானிஷியம் உள்ள நகரத்தில் Boyd Stevens, sheriff ஆக இருக்கிறார். அங்கு இருக்கும் மக்களை, சூரியன் மறைவதற்குள் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.அவரின் அறிவுறுத்தலின் படி மக்களும் பயந்த வண்ணம் செல்கிறார்கள்..

அந்த இரவில் ஜன்னல் பக்கத்தில் இருந்து ஒரு உருவம் கண்ணாடியை திறக்குமாறு ஒரு சிறுமி இடம் கேட்கிறது. அதற்கு சிறுமி திறக்க, உடனே அந்த பேய் கொடூரமாக கொலை செய்கிறது. இதை பார்த்த மக்கள் அச்சமும் பயமும் அடைகிறார்கள். இறந்த உடல்களை அடக்கம் செய்துகொண்டு இருந்த தப்பித்தார்க்ள போது, அந்த ஊருக்கு ஒரு குடும்பம் வருகிறார்கள். அவர்களுடன் இன்னொரு காரில் வழி மாறி இருவர் வந்து சேர்க்கிறார்கள். அந்த இடத்திற்கு புதிதாக வந்த நபர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அங்கு இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்.

ஸ்ட்ரீமிங்

from தொடர் நெட்டபிலிஸ் தலத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரின் முதல் சீசன் கடந்த 2021ம் ஆண்டு ஒளிபரப்ப செய்யப்பட்டது. அதன் பின் 2023 ன் ஆண்டு இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது. தற்போது இந்த தொடரின் மூன்றாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

from series review

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles