எதிர்நீச்சல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த லிஸ்டில் இருப்பது ரசிகர்களால் அதிக கொண்டாடப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி இருந்தார்.
மேலும் இந்த சீரியலில் இடம்பெற்றுள்ள நிறைய வசனங்கள் சமூக வலைத்தளங்களில் மீம் டெம்ப்ளட்டாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது . இதனால் எதிர்நீச்சல் சீரியலை மலையாளத்தில் ரீமேக் செய்து ஒளிபரப்பாகி வருகிறது.
From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!
ப்ளாக் பஸ்டர் சீரியலான எதிர்நீச்சல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நிறைவு பெற்றது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
சினிமா நடிகைகளுக்கு நிகராக சீரியல் நடிகைகளுக்கும் தனி கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மதுமிதா.

கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை . அதன் பின்னர் இவர் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்தார். அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆக, இவருக்கு தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவனத்தை ஈர்த்துவிட்டார்.
தற்போது மதுமிதா மீண்டும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் , அதில் நடிக்கவில்லை என்று மதுமிதா தெரிவித்துவிட்டார்.
சீரியலில் அடக்கவுடக்கமாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மதுமிதா அடிக்கடி கிளாமரான உடையில் போடோக்கள் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். மதுமிதா, நடிப்பை தாண்டி சுற்றுலா செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று. அவர் உலகின் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகத்தில் மதுமிதா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலானது.
இந்த சூழலில் மதுமிதா, நான் ஹீரோயினாக நடிக்கவில்லை வேறொரு புதிய அத்தியாயம் துவங்குகிறது என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
நான் ஹீரோயினாக நடிக்கவில்லை புதிய அத்தியாயம் துவங்குகிறது என்று மதுமிதா குறிப்பிட்டு இருப்பது அவருடைய திருமணம் பற்றியா? மதுமிதா விரைவில் திருமணம் செய்ய போகிறாரா? அல்லது வேறு பிஸ்னஸ் தொடங்கி இருக்கிறாரா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், நான் ஹீரோயினாக நடிக்கவில்லை வேறொரு புதிய அத்தியாயம் துவங்குகிறது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
புதிய அத்தியாயம் துவங்குகிறது என்று மதுமிதா குறிப்பிட்டு இருப்பது அவருடைய திருமணம் பற்றியா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.



