மோகன்லால்
இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டு வருபவர் தான் மோகன்லால். லூசிஃபர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் பெரும் பொருட் செலவில் உருவானது. பிரபல நடிகராக இருக்கும் பிரித்விராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். இதில் மஞ்சு வாரியர், டோனியோ தாமஸ், சுராஜ் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
கடந்த மார்ச் 27ம் தேதி எம்புரான் படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இப்படத்தில்
இடம்பெற்றுள்ள கலவரம் தொடர்பான காட்சிகள் குஜராத்தில் கடந்த 2002-ல் நடந்த சம்பவங்களை மையப்படுத்தியும், இந்துத்துவகொள்கைகளை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்து இருப்பதாக வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மோகன்லால் தனது சோசியல் மீடியா பக்கத்தில் மன்னிப்புக் கோரி, சர்ச்சையான காட்சிகள் நீக்கப்படும் என்று தெரிவித்தார். இருப்பினும் படத்தை தடை செய்ய வேண்டும் என சில தரப்பினர் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படி இருக்கும் சூழலில் எம்புரான் திரைப்படத்தின் வசூல் விவரம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இப்படம் வெளியாகி 5 நாட்களில் உலக அளவில் ரூபாய் 215 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வசூல்:
இந்நிலையில், 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்திருக்கும் எம்புரான் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, உலகளவில் ரூ. 215 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம் வாங்க.