ஈகோ
சில நாட்களுக்கு முன்பு மலையாளத்துல வெளியான ‘ஈகோ’ படம் பத்தி பேசலாம். 5 கோடி பட்ஜெட் போட்டு 50 கோடிக்கு மேல வசூல் பண்ணி 10 மடங்கு லாபம் கொடுத்த சூப்பர் ஹிட் படம் இது. ஒரே படத்துலயே புரொடியூசர் செட்டில் ஆயிட்டாரு. அப்படி என்ன இருக்கு இதுலன்னு பார்க்கலாமா?
படத்தோட ஸ்டார்ட்டிங் & கான்செப்ட்
அதாவது ஜர்னி > டெஸ்டினேஷன். இதுதான் படத்தோட மெயின் தீம்.
ஒரு ஹோட்டல்ல முகம் காட்டாம ஒருத்தர் தங்குறார். கையில நாய் கூண்டு, பொட்டி, படிக்கை – எல்லாம் நாய் சம்பந்தப்பட்ட ஐட்டம்ஸ். அவர் பேர் மோகன். காட்டுக்குள்ள போய் ஒரு நாயை சுதந்திரமா விடுறார். அந்த நாய் பயங்கரமா இருக்கு – நாயா நரியா-ன்னு தெரியாத ரேஞ்சு.
அதே சமயம் மலை மேல ஒரு ஒத்த வீடு. அங்க ஒரு சிங்கப்பூர் பாட்டி + அவங்கள பாத்துக்குற ஒரு ஹீரோ (எடுபடி டைப்). சுத்தி நாய்கள் எல்லாம் திரியுது. இந்த நாய்கள் எல்லாம் குறியச்சன் (பாட்டியோட புருஷன்) வளர்த்து காட்டுல விட்டவை. சிங்கப்பூர், மலேசியா எல்லாம் போய் பிரீட் பண்ணி விட்ட நாய்கள்.
மெயின் ட்விஸ்ட் & கதை
ஃப்ளோ
கதை முழுக்க ஒரு மர்மம்: குறியச்சன் எங்க இருக்கான்?
போலீஸ் தேடுது.. நேவி ஆபீசர் தேடுதுநக்சல்கள் தேடுது.. லாரி டிரைவர்கள் தேடுது..நம்ம ஹீரோவும் தேடுதான்
ஆனா கடைசி 20 நிமிஷத்துல பெரிய ட்விஸ்ட்: இந்த ஹீரோ தான் மணிகண்டன் (பழைய கேஸ்ல காணாம போனவன்). அவன் குறியச்சனோட பாடிகார்டு மாதிரி இருந்தவன்.
அவனுக்கு ஒரே மாஸ்டர் – குறியச்சன். நாய் மாதிரி விசுவாசம். குறியச்சனை யாரும் கொல்லல. அவன் இன்னும் உயிரோட இருக்கான் – ஆனா காட்டுக்குள்ள ஒரு குகையில நாய்கள் சூழ்ந்து சிறையில மாட்டப்பட்டிருக்கான்.
அந்த அம்மா (சிங்கப்பூர் பாட்டி) தான் அவனை அடைச்சு வச்சிருக்கா.
ஏமாற்றப்பட்ட பழி → நாய்களை வச்சு பழிவாங்கல்.
நடிப்பு & டெக்னிகல்
ஹீரோ (மணிகண்டன்) – ரொம்ப கூலா, கோபமா, விசுவாசமா – எல்லா ஷேட்ஸும் அழகா கொடுத்திருக்கார்.
சிங்கப்பூர் பாட்டி – மலையாளத்துலயே பிரிச்சு மேய்ஞ்சிருக்கா.
நாய்கள் – படத்தோட ஹீரோய்கள். அவங்க expressions, ட்ரெயினிங் – அசத்துது.
மொத்தத்தில்
5 கோடி பட்ஜெட்டுக்கு இவ்வளவு இன்டென்ஸ் த்ரில்லர் + ட்விஸ்ட் + நாய்கள் மேல சமூக கமெண்டரி + கேரளா-கர்நாடகா எல்லை காட்சிகள் – சூப்பர் வொர்த் வாட்ச்.
மிஸ் பண்ண கூடாத படம்.
ரேட்டிங்: 8.2/10



