கோமாளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்படத்தை தொடர்ந்து, லவ் டுடே படத்தை அவரே இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார். அதில் ஹீரோயினாக இவானா நடித்திருந்தார். இப்படம் மிக பெரிய வசூல் செய்து சாதனை செய்தது.
சினிமாவில் நடிகராக அதிகம் கவனம் செலுத்தி வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது ட்ராகன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி இயக்கியுள்ளார். இப்படத்தில் கே எஸ் ரவிக்குமார், மிஸ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான், அனுபமா பரமேஸ்வரன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை AGS நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படம் வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன், ட்ராகன் படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ட்ராகன் படம் ரூபாய் 37 கோடி பட்ஜெட் எடுத்து முடித்ததாக படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். இதை ஈசியாக கவர் பண்ணி இருப்பார்கள். ஏன்னென்றால், டிஜிட்டலில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அதனால் மிக பெரிய தொகைக்கு டிஜிட்டலில் வியாபாரம் ஆகி இருக்கும். அடுத்து சாட்டிலைட் உரிமம், ஓவர்சிஸ் என அதிலேயே கவர் பண்ணி இருப்பார்கள். அதுமட்டுமின்றி தமிழ் நாட்டில் அவர்களே படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.
பிரதீப் ரங்கநாதன் ஏன் AGS தயாரிப்பில் பண்ணுகிறார் என்றால், ஆரம்பித்தில் பிரதீப் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னது நிறைய பேர் நிராகரித்தார்கள். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுத்தது AGS நிறுவனம் தான். நீங்க நல்ல டைரக்ட் பண்றிங்க நீங்க நல்ல பண்றிங்க என்று அவர் பாராட்டி படத்தை கொடுத்தது அந்த நிறுவனம் தான். அந்த படம் மிக பெரிய வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
ட்ராகன் படம் மொத்த பட்ஜெட் 37 கோடி என்பதால், எப்படியும் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபம் இருக்கும். ஒரு படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தால் அந்த படம் வெற்றி பெரும். ஆனால் மீதி படங்கள் ரொம்ப கஷ்டபடும்.
மேலும் அவர் பேசுகையில், தனுஷ் நீலாவுக்கு என்னடி என் மீது கோபம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தார்கள். உண்மையில் தனுஷ் இட்லி கடை படத்தின் ஷூட்டிஙகில் இருந்ததால் தான் அவரால் வர முடியவில்லை. அதுமட்டுமின்றி தனுஷ் அங்கு வந்திருந்தால் மீடியாவின் கவனம் மொத்தமாகதனுஷ் மீது இருந்திருக்கும். இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.



