சுசீந்திரன்
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக மாறியவர் தான் இயக்குனர் சுசீந்திரன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை இவர், அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2k லவ் ஸ்டோரி படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் சுசீந்திரன் பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர், இப்போது இருக்கிற 2k கிட்ஸ் ரொம்ப vibe – ஆ இருக்கிறார்கள். நான் எடுத்த ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. அந்த நேரத்தில் இருந்து டீனேஜ் பசங்களுக்குள் நடக்கூடிய கன்டென்ட் மையமாக வைத்து படம் எடுத்தோம். கிளைமாக்ஸ் அப்படி வைத்தோம்.
ராஜபாட்டை திரைப்படம் ஷூட்டிங் எடுக்கும் போது 10 நாளில் தெரிந்தது, இந்த படம் ஓடாது என்று. ஒரு இயக்குனருக்கு தெரியும் படம் ஓடுமா? இல்லையா என்பது குறித்து தெரியும். இது பற்றி தயாரிப்பாளருடன் பேசினேன். நாங்க எதிர்பார்த்த மாதிரி படம் வரல படத்தை ட்ராப் பண்ணிரலாம் என சொன்னேன், அதற்கு தயாரிப்பாளர் பயந்துவிட்டார். இதற்கு முன்னாடி இயக்குனர் செல்வராகவன் படம் பண்ணி 23 நாட்களில் ஷூட்டிங் ட்ராப் ஆகிவிட்டது. பணம் ரொம்ப நஷ்டமாகிவிட்டேன். இதையும் நீங்க ட்ராப் பண்ணலாம் என்று சொல்றிங்க, எப்படியாவது படத்தை பண்ணிவிடுங்க சார் என்று என்னிடம் கூறினார. ஒரு படம் ஓடாது என்று தெரிந்தும் அந்த படத்தை எடுக்கிறோம் பாருங்கள். அந்த மனநிலையில் படம் எடுப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
டீசர் பாத்தாலே தெரியும் படம் ஓடுமா என்று, எனக்கு இந்த படம் முன்பே தெரியும் செட் ஆகாது என்று, இதற்கு நானும் ஒரு காரணம். நான் முதல் காரணம் அதற்கு நானே பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். ஒரு படத்தின் கேப்டனாக இருக்கும் போது, தோல்விக்கு காரணத்தை பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் . அந்த படம் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. படம் ஓடாது என்று செய்வது உண்மையில் ரொம்ப கடினம் தான்.
சில படங்கள் எதிர்பார்க்காமல் ஓடும், சமீபத்தில் வெளிவந்த மதகதராஜா படமும் அப்படி தான். நான் டீசர் பார்த்துவிட்டு இந்த படம் எல்லாம் ஓடாது என்று நினைத்தேன். ஆனால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
நான் மகான் அல்ல
இந்த படமாக இருந்தாலும் அது பிடிக்கற மாதிரி எடுக்க வேண்டும். நான் மகான் அல்ல படத்தில் வில்லனாக சின்ன பசங்கள் நடித்திருப்பார்கள். இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கேள்வி எனக்குள் இருந்தது. அந்த சமயத்தில் ஜாக்கி சானின் போலிஷ் ஸ்டோரி என்று பார்த்தேன். அதில் சின்ன பசங்க ஹீரோவை கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பார்கள். அந்த படம் ஹோலிவுட்டில் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர். அதே போல நம்ப பண்ணலாம் என்று எண்ணம் வந்தது. அதனால் தான் அந்த படத்தில் சின்ன பசங்களை வில்லனாக வைத்தோம். நினைத்தது போல ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர் என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.