Wednesday, March 4, 2026

ஷங்கரை மிஞ்சிய அட்லீ.. ஒரு படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா?

கோலிவுட் சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். அவர் இயக்கிய எந்திரன், நண்பன் படங்களில் அட்லீ உதவி இயக்குனராக பணியாற்றினார். கடந்த 2013 ம் ஆண்டு ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக மாறினார். இப்படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமான அட்லீ, அடுத்த படமே முன்னணி நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து விஜய்யுடன் இணைந்து மெர்சல், பிகில் என அடுத்த அடுத்த படங்களில் பணியாற்றினார்.; விஜய்யை வைத்து ஹாட்ரிக் வெற்றியை பெற்ற அட்லீ, அடுத்து பாலிவுட்டில் உச்ச நடிகராக இருக்கும் விஜய்யை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அட்லீ, இவர்கள் கூட்டணியில் வெளிவந்த இப்படம் ரூபாய் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனையை படைத்தது.

 

ஜவான் படத்திற்கு மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறிய அட்லீ, அவருடைய இயக்கத்தில் நடிக்க நிறைய பிரபலங்கள் போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் அவர் அடுத்ததாக பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்திற்காக அட்லீ ரூபாய் 60 கோடி சம்பளமாக வாங்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles