Wednesday, March 4, 2026

வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் முடிவுக்கு வர இதுதான் காரணம்.. நடிகர் திரவியம் ராஜகுமாரன் ஓபன் டாக்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் திரவியம் ராஜகுமாரன். கோவையை சேர்ந்தவர் தி, அனிமேஷன் மற்றும் VFX துறையில் பணியாற்றி வந்துள்ளார். நடிப்பில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இவருக்கு சீரியல் மிகப் பெரிய வரவேற்பை கொடுத்தது. அந்த தொடரில் காதல், ஆக்ஷன் சீன்ஸ் என அனைத்திலும் சிறப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். மேலும் கடந்த 2019 ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த இளமையான ஜோடி விருது கொடுக்கப்பட்டது.

ஈரமான ரோஜாவே சீரியலுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் நடித்தார். இதில் திரவியம் ராஜகுமாரன் நாயகனாக நடித்திருந்தார். இதில் ஜோடியாக நடிகை ஸ்ரீதா சிவதாஸ் நடித்து இருந்தார். இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஆர்த்தி நடித்திருந்தார். சமீபத்தில் இந்த சீரியல் நிறைவு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திரவியம் ராஜகுமாரன் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், வீட்டுக்கு வீடு சீரியல் இவ்ளோ சீக்கிரம் முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடக்கத்தில் வேற மாதிரி இருந்தது இந்த ப்ராஜெக்ட். அதுக்குள்ள இந்த சீரியல் முடிகிறது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. சீரியல் கொஞ்சம் நெகடிவ் கருத்துக்கள் வந்தது. சீரியலில் அஞ்சலியயிடம் தப்பா நடத்துகிற காட்சிகள் பார்த்த மக்கள் நெகட்டிவாக பேசினார்கள். இப்போ இருக்கிற காலகட்டத்தில் இந்த மாதிரி நடந்தால் அவருடைய குடும்பம் எப்படி சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற எடுத்துக்காட்டுக்காக அந்த கதையை அப்படி எடுத்தோம். இது ஒரு இமாஜினேஷன் தானே. இது எடுத்துக்காட்டுக்காக இருக்கலாம். ரசிகர்களின் ஆசை எதிர்பார்ப்பு மாறிக்கொண்டு வருகிறது.

மேலும் அவர் பேசுகையில், நான் வெளிய போனால் ரசிகர்கள் என்னை கவனிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். இதெல்லாம் பார்க்கும் போது இன்னும் நிறைய பண்ணனும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இது எனக்கு ஒரு blessing ஆக பார்க்கிறேன்.

எதிர்காலத்தில் எனக்கு நிறைய கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது. குறிப்பாக வில்லனாக நடிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கிறது.அதுமட்டுமின்றி காமெடி கதாபாத்திரத்திலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று திரவியம் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் முடிவுக்கு வர இதுதான் காரணம்.. நடிகர் திரவியம் ராஜகுமாரன் ஓபன் டாக்!!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles