ஜுனியர் என்டிஆர்
தெலுங்கு இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் தான் தேவரா. இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்திருந்தார்.
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து இருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
வசூல்:
தற்போது வரை தேவரா திரைப்படம் ரூபாய் 330 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.