துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி, தற்போது இந்திய அளவில் பிரபல நடிகராக மாறியுள்ளார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் செழியன் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், நான் பணியாற்றிய எல்லா படமும் எனக்கு சவாலாக தான் இருந்தது. என்னுடைய முதல் படம் கல்லூரி படத்தை பண்ணும் போது இயக்குனர் பஸ் உள்ளே ட்ராலி வைக்க சொன்னார். அப்போது சீட் எல்லாத்தையும் எடுத்து ட்ராலி வைத்தோம். கொஞ்ச நேரத்தில் ட்ராலி வேண்டாம் என்று சொல்லுவார். அந்த நேரத்தில் அது கஷ்டமாக இருந்தது. கடைசியில் அந்த பஸ் எரியும் போது எடுக்கும் காட்சி இன்னும் கஷ்டமாக இருந்தது.
பாலாவின் பரதேசி படம் பண்ணும் போது landscape 700 துணை நடிகர்கள் இருப்பார்கள். அந்த படம் பண்ணும் போதும் சவாலாக இருந்தது. கல்லுரு படம் எடுக்கும் போது தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால் நேரில் பார்க்க ரோமா கலராக இருந்தார். அப்போது படம் எடுக்கும் போது சவாலாக இருக்கும். ஹாலிவுட் படங்களில் ஒருத்தர் கருப்பாக இருப்பார். இன்னொருவர் வெள்ளையாக இருப்பார். ஆனால் திரையில் சரியான exposure-ல் படம் காட்சி. இதை எப்படி லைட் வைப்பது திரையில் exposure செய்வதை தெரிந்துகொண்டு படத்தை எடுத்து முடித்தோம்.
விஜய் படத்தில் பணியாற்றும் போது இப்படி தான் நடந்து. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது விஜய் சேதுபதி என்னிடம், சார் பண்ண படத்திலேயே என்னை அழகாக காட்டியது உங்களுடைய தென்மேற்கு பருவ காற்று படத்தில் தான் சார். அதை அடுத்து பல படங்களில் நடித்துவிட்டேன், இருப்பினும் அந்த படத்தில் மட்டும் அழகாக இருக்க என்ன காரணம் சார் என்று கேட்டார். அதற்கு, நீங்கள் அழகாக இருந்தீர்கள் அதனால் என்னால் எடுக்க முடிந்தது என்று சொன்னேன்.
சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் சேர்ந்து பண்ணும் போது ரொம்ப நெருக்கமாக இருப்போம். படம் முடிந்த பிறகு அவங்க நம்பர் நம்கிட்ட இருக்கும், நம்ப நம்பர் அவங்க கிட்ட இருக்கும். அவர்கள் வேறு படத்தில் பிஸியாக இருப்பார்கள். நம்ப வேற படத்தில் பிஸியாக இருப்போம்.

அப்போது விஜய் சேதுபதி இப்படி இருந்தாரோ, இப்போதும அப்படி தான் இருக்கிறார். அவர் இன்னும் மாறவில்லை. தென்மேற்கு பருவ காற்று படம் பண்ணும் போது விஜய் சேதுபதி முதல் படம். அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார், ஷூட்டிங் சமயத்தில் தரையில் அமர்ந்துகொண்டு எதோ ஒரு யோசனையில் இருப்பார். என்னப்பா யோசிக்கிற என்று கேட்டேன். அதற்கு அவர், சார் ஒன்னும் இல்ல சார், வீட்டில் சொல்லாமல் வந்து படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் நடிக்கிறது என்னுடைய மனைவிக்கு தெரியாது, நான் நடிக்கிறது அவங்களுக்கு பிடிக்காது சார் என்று சொன்னார். அதன் விஜய் டிவியில் பார்த்த பின்பு, இப்போ மனைவி நடிக்கிறது தெரியுமா? என்று கேட்டேன். அதற்கு விஜய் சேதுபதி குமுதா ஹாப்பி சார் என்று சொன்னார். இப்போது விஜய் சேதுபதி பெரிய எடுத்தற்கு வந்துவிட்டார் என செழியன் கூறியுள்ளார்.



