பாக்யராஜ்
பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ்க்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இவரை திரைக்கதை அரசன் என்று செல்லமாக அழைப்பார்கள். சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
திருமணம்:
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசெப் பாக்யராஜ் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி பிரவீனா, தெலுங்கர். சிறிது காலம் தமிழ் திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். தமிழ் மொழி தெரியாத இவருக்கு பாக்யராஜ் தாமாகவே மொழி கற்று கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மொழி பயிற்சியின் இடையே காதல் மலர, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தை நாமக்கல் குமரேட்டியில் எம்ஜிஆர் நேரடியாக நடத்தியதாகவும், சிவாஜி கணேசன் உடனிருந்து ஆசீர்வதித்ததாகவும் கூறப்படுகிறது.
ஜோதிகாவை விமர்சித்தாரா சிம்ரன்!! உண்மையை உடைத்த பிரபலம்..
திருமணத்திற்குப் பிறகு பிரவீனா, பாக்யராஜின் வாழ்க்கைக்கு பெரும் ஆதரவாக இருந்தார். அந்நேரத்தில் பாக்யராஜ் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டராக சின்ன படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், அவர் தங்க இடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில்தான் பிரவீனா அவருக்கு மன உறுதியாக இருந்தார்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு சில வருடங்களில் பிரவீனா, மஞ்சக்காமலை நோயால் பாதிக்கப்பட்டு, தனது உடல் நலத்தை இழந்து படுக்கையிலே தவித்தார். அந்த நேரத்தில், பாக்யராஜ் பிரபல நடிகை பூர்ணிமா மீது காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் காதலிக்க தொடங்கினார்கள். அதற்கு முன்பு நடிகர் மோகனை பூர்ணிமா காதலித்தாகவும் ஆனால் சில காரணங்களால் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
பிரவீனா வாழ்நாள் முடிவில், தனது கணவரின் காதல் மற்றொரு பெண்ணிடம் இருப்பதை அறிந்து மிகுந்த வேதனையில் இருந்ததாகவும், இதுவே அவரது உடல்நலத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் பலரும் கூறினார்கள். பிரவீனா மறைவுக்கு பிறகு பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தது எம். ஜி.ஆர் தான்.
சாபம்
மேலும் வாத்தியார் மகன் மக்கு-னு சொல்லுவது போல, இயக்குனர் மகன்கள் வெளங்காம தான் போனாங்க. என்னனு தெரியல பெண் சாபமாக கூட இருக்கலாம். அப்பா பண்ண தப்பு பிள்ளைகளை தானே வந்து சேரும் என்று பத்திரிக்கையாளர் சபிதா ஜோசெப் கூறியுள்ளார்.