தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் அசோக் செல்வன். இவர் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான சமயத்தில் அசோக் செல்வனிற்கு வேறு பெண்ணே கிடைக்கவில்லையா என்று கீர்த்தி பாண்டியனின் உடல் தோற்றத்தை கிண்டல் செய்தனர்.
From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!
இந்நிலையில் அசோக் செல்வனின் அம்மா,கீர்த்தி பாண்டியன் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், திருமண போட்டோ வெளியானதும் என் மருமகள் குறித்து நிறைய நெகடிவ் விமர்சனங்கள் வெளியானது. ஏன் இப்படி பேசுறாங்க என்று தெரியவில்லை. நிறம் என்பது முக்கியம் இல்லை, அவளுடைய மனசு மிகவும் அழகானது.அவளுடைய உயரத்திற்கு ஏற்ப உடம்பை மெயின்டெயின் பண்ணி வச்சி இருக்கா. அது நிறைய பேரால் முடியாது. என்னுடைய மருமகள் எல்லா விஷயத்திலும் அழகு தான் என்று கூறியுள்ளார்.