ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். கடந்த 2022ம் ஆண்டு இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் குமார் பட வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, குட் பேட் அக்லி படத்தின் டீர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், விடாமுயற்சி படத்திற்கு என்னென்ன எதிர்மறை விமர்சனங்கள் வந்ததோ, அதை எல்லாம் அடுத்து நொறுக்க போகிறது குட் பேட் அக்லி திரைப்படம். இந்த படத்திற்கு ரெட் டிராகன் என்று வைத்து இருக்கலாம். இந்த படத்தின் டீசர் பார்க்கும் போது கேஜி அப் படத்தின் பீல் கொடுக்கிறது. டீசர் முழுக்க அஜித் தான். ரொம்ப காலமாக அஜித் செண்டிமெண்ட் படங்கள் தான் பண்ணுகிறார், commercial படங்கள் பண்ணவில்லை என்ற விமர்சனம் அவர் மீது இருந்தது. இதெல்லாம் பிரேக் பண்ண போகிறது இந்த படம்.
அஜித் படத்தின் டீசரை திரையரங்குகளில் வெளியிட்டால் திருவிழா போல இருக்கும். இன்று வெளியான குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கொரியன்ஹீரோவான Ma Dong-seok படங்களை அஜித் குமார் ரீமேக் செய்து நடித்தால் வேற மாதிரியாக இருக்கும். இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று பல பேர் கூறியுள்ளனர். குட் பேட் அக்லி படத்தின் டீசர் பார்க்கும் போது தீனா, மங்காத்தா போன்ற படங்கள் தான் ஞாபகத்தில் வருகிறது. இந்த படத்திற்கு குட் பேட் அக்லி பேர் வைத்ததிற்கு ரெட் டிராகன் என்று வைத்து இருக்கலாம்.
படத்தின் கதையானது வெளிநாட்டில் அஜித் ஜெயிலில் இருக்கிறார். இதில் அஜித் கதாபாத்திரத்தில் வருகிறார். யார் குட் யார் பேட் யார் அக்லி என்று கண்டுபுடிக்க முடியவில்லை. டீசர் ஓப்பனிங்கில் அப்படியே மார்க் ஆண்டனி படத்தின் flavour இருக்கிறது. உண்மையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் தீவிர ரசிகர் என்பதை நிரூபித்து விட்டார். டீசர் பார்க்கும் போது 10 மாணிக் பாஷா பார்த்த மாதிரி இருக்கிறது. இந்த படத்தின் கதை தங்கத்தை மையமாக வைத்து வருகிறதா என்ற கேள்வி இருக்கிறது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.