சுரேஷ்:
80, 90 களில் பிரபல நடிகராக வந்தவர் தான் சுரேஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்திருந்த இவர், விஜய்யின் தலைவா படத்தின் மூலமாக மீண்டும் கம்பேக் கொடுத்தார். இப்போது பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சுரேஷ், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு நிறைய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், நான் கர்மாவில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். நமக்கு என்ன எழுதி இருக்கோ அதன் நடக்கும். நம்ப முயற்சி பண்ணலாம் ஆனால் சில சமயங்களில் அது நடக்காமல் போகலாம். நமக்காக கடவுள் என்ன எடுத்த கொடுத்து இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நாளைக்கு என்ன நடக்கும் யாருக்கும் தெரியாது. அதுக்குன்னு எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் இருப்பதும் தவறு. ரஜினிகாந்த் கமல் ஆகியோர் இன்னும் அந்த ஹீரோ இடத்தில் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.அதை மதிக்கிறேன். நானும் அந்த இடத்திற்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
நான் உதவி இயக்குனராக இருக்கும் போது பாரதிராஜா சார் படத்தில் நடிக்க கூப்பிட்டார். அப்படி தான் நடிகராக மாறினேன். உதவி இயக்குனராக இருந்தேன், நடன கலைஞராக இருந்து இருக்கிறேன். அதனால் எனக்கு உதவி இயக்குனர்கள் மீது உயிர். அவர்களை நாளைய இயக்குநர்களாவே பார்க்கிறேன். நானும் அந்த இடத்தில் இருந்து வந்து இருக்கிறேன். வீட்டில் கடன் பிரச்சனைகள் இருந்த காரணத்தால் 16 வயதில் வேலைக்கு சென்றேன். என்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது. அம்மாவும் ஹவுஸ் வைஃப். அதனால் 24 மணி நேரமும் வேலை செய்வேன்.
34 லட்சம் கடன்:
ஒரு வருடத்திற்கு 16 படங்கள் பண்ணேன். ஏன்னென்றால் என்னுடைய அப்பாவுடைய கடன்கள் தீர்க்க. 80களில் 34 லட்சம் கடன் இருந்தது. 6 வருடம் நடித்து அந்த கடன்களை கட்டினேன்.
என் அப்பாவின் நிலைமை மோசமாக இருந்த சமயத்தில் என்னுடைய முதல் படம் ஓடியது. அப்போது பணத்தை திரும்பி கொடுத்திருவேன் என்ற நம்பிக்கை வந்தது. கொடுத்த வாக்கு காப்பாத்தணும் எண்ணத்தில் படங்கள் தொடர்ந்து நடித்தேன்.
எனக்கு நிறைய லவ் லெட்டர்கள் வந்து இருக்கிறது. குறிப்பாக ஒரு பெண் ரத்தத்தில் லவ் லெட்டர் எழுதி அனுப்பி இருந்தார். அதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகிவிட்டேன். அதன் பின் எந்த ஒரு லவ் லெட்டர்களை படிப்பதை நிறுத்திவிட்டேன்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி ஹைதராபாத் செட்டில் ஆனேன். ரொம்ப தனிமையாக இருந்ததால் என்னுடைய குடும்பத்தை அங்கு அழைத்து சென்றேன். அவர்கள் வந்த பிறகு இன்னும் தனிமையாக இருந்தது. என்னடா இனி பண்ண போற என்ற கண்ணோட்டத்தில் என்னை பார்ப்பார்கள். அதன் பின் தெலுங்கில் பல படங்கள் நடித்தேன். 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன் என்று சுரேஷ் தெரிவித்து இருந்தார்.