Wednesday, March 4, 2026

மனநல பாதிப்பு, போதைப் பழக்கம்.. தனுஷ், சிம்பு தனிப்பட்ட முறையில் நடந்தவிதம்.. ரகசியத்தை உடைக்கும் பிரபலம்!!

நடிகர் ஸ்ரீ

இருகப்பற்று, வில்லம்பு மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஸ்ரீ .

சமீபத்தில் இவர் பற்றி சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் புகைப்படமும் வீடியோக்களும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

மனநல பாதிப்பு?

இந்நிலையில் இது குறித்து பேசிய பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன், சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்களில் ஸ்ரீயின் தோற்றம் முற்றிலும் மாறியிருப்பதாகவும், அவர் மனநல பாதிப்பு மற்றும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த செய்தி அவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ ஒரு அமைதியான, பணிவான நடிகர். அவரது படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர். இப்படி ஒரு நிலைக்கு அவர் சென்றிருப்பது மனதை பதற வைக்கிறது என்று அவருடன் பணியாற்றிய ஒரு திரையுலக பிரமுகர் தெரிவித்தார்.

ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து திரையுலக சங்கங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்துகின்றனர்.நடிகர் சங்கம் இதில் தலையிட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்து மறுவாழ்வு அளிக்க முயற்சிக்க வேண்டும். இது அவர்களது பொறுப்பு.

முன்னதாக, ஸ்ரீ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு நாளிலேயே வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வுக்கு பின்னர் அவர் பொது வெளியில் தோன்றுவது குறைந்துவிட்டது. தற்போது வெளியாகியிருக்கும் வீடியோக்களில், ஸ்ரீ தனது தோற்றம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து பேசுவது அவரது மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்த்துவதாக உள்ளது.

“ஸ்ரீயை மீட்டெடுக்க திரையுலகம் ஒன்றிணைய வேண்டும். தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள் தனிப்பட்ட முறையில் பலருக்கு உதவியிருக்கிறார்கள். இதேபோல் ஸ்ரீயின் நிலையை அறிந்து உதவ முன்வரலாம்.

நடிகர் ஸ்ரீயின் மனநலத்தை மீட்டெடுக்கவும், அவருக்கு உரிய மருத்துவ உதவி வழங்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம், திரையுலகில் உள்ளவர்களுக்கு மனநல ஆதரவு மற்றும் கவனிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது என்று அந்தணன் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles