ஜீவா:
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜீவா. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த இவர், ப்ளாக் படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். இப்படத்திற்கு பின் ஜீவா பல முன்னணி ஹீரோக்களுடன் கூட்டணி வைத்துள்ளார். தற்போது [பா விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள அகத்தியர் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா, அர்ஜுன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் நிச்சயம் ஜீவா கேரியரில் மிக பெரிய படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது .
பேட்டி:
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ஜீவா, பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசுகையில், ஒவ்வொரு படம் வெளியாகும் போது ஒரு தனி பீல் இருக்கும். அகத்தியர் படத்திற்காக கடின உழைப்பை போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகும் என்று நம்புகிறேன். இந்த காலகட்டத்தில் மக்களை திரையரங்கு கொண்டு வர நிறைய விஷயங்களை பண்ண வேண்டியது இருக்கிறது.
எனக்கு யுவன் முதல் முதலில் சந்தித்தது ஒரு சீரியசான genre ல் தான் மீட் பண்ணோம். ராம் படத்தை டப்பிங் பண்ணும் போது சரியாக பண்ணவில்லை. அங்கு இருந்து போனதற்கு பிறகு வேறொரு வைத்து முடித்தார்கள். ராம் படத்திற்கு பின் கற்றது தமிழ் படத்தில் ஒன்றாக பணியாற்றினோம். அதற்கு பின் சிவா மனசுல சக்தி படம் பண்ணும் போது ரொம்ப கிளோஸ் ஆனோம்.
2000 காலகட்டத்தில் நிறைய போட்டி இருந்தது. பல நடிகர்கள் வந்தார்கள் சினிமாவுக்கு. சிம்பு, தனுஷ், ரவி, ஆர்யா எனப் பல நடிகர்கள் வந்தார்கள். எல்லாரும் புது இயக்குனர்களுடன் வந்தார்கள். அந்த காலம் தமிழ் சினிமாவின் கோல்டன் பீரியட்டாக இருந்தது. நான் இனி கொஞ்சம் த்ரில்லர் படங்களில் நடிப்பதாக சொல்லி இருந்தேன்.அதற்கு காரணம், த்ரில்லர் படங்கள் என்றால் கொஞ்சம் சீக்கிரமாக முடிந்துவிடும் ரொம்ப ஈஸி.
ஒரு நிகழ்ச்சியில் போகும் போது ஒரு நியூஸ் பற்றி கேள்வி கேட்டாங்க. அதற்கு நான் தெரியாது என்று சொல்லவிட்டேன். அரசியல்வாதி என்றால் நாட்டு நடைமுறை பற்றி தெரிந்துகொள்வார்கள் நான் ஒரு சாதாரண குடிமகன். இப்படி இருக்கும் போது, இது கூட உங்களுக்கு தெரியாதா? என்று கேள்வி கேட்கும் போது சண்டை வந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் கடை நிறுவனர் வந்து, சார் உங்களால் நம்ப கடைக்கு நல்ல பப்லிசிட்டி கிடைத்துவிட்டது என்று சொன்னார் என்று ஜீவா தெரித்துள்ளார்.