ஆரவ்:
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆரவ். அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுவரை முன்னேறி பிக் பாஸ் டைட்டில் பட்டத்தையும் வாங்கினார். இதனை அடுத்து இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளிவந்த கழக தலைவன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் குமார் – மகிழ் திருமேனி கம்போ வெளிவந்து இருக்கும் விடாமுயற்சி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆரவ் நடித்திருக்கிறார். தற்போது இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
விடாமுயற்சி:
இந்த நிலையில் நடிகர் ஆரவ் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு விடாமுயற்சி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில், எனக்கு அஜித் சார் ரொம்ப பிடிக்கும் அவருடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் இப்போது அவருடன் இணைந்து படம் நடித்துவிட்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. விடாமுயற்சி படம் சைன் பண்ணும் போதே அவ்ளோ மகிழ்சியாக இருந்தது. அஜித் சார் மாதிரி தான் அர்ஜுன் சாரும் ரொம்ப நல்ல மனிதர். அதனால் தான் அவங்க அந்த இடத்தில் இருக்கிறார்கள்.

எப்போதுமே அஜித் ரொம்ப தாழ்மையாக நடந்துகொள்வார். நான் சாதாரணமான மனிதன், நான் பெரிய ஸ்டார் கிடையாது என்பதை அஜித் சார் மனதில் வைத்துக்கொள்வார். சினிமாவில் அவருடைய முதல் படத்திற்கு எப்படி முயற்சி செய்தாரோ, அதே போல இப்போதுவரை இருக்கிறார். ஒரு தாய் எப்படி
குழந்தையை அரவனிப்பது போல அஜித் சார் செடிக்கு வந்த முதல் நாளில் இருந்து எல்லாரையும் அரவனித்தார். அவ்ளோ அழகாக படத்தை சுமந்து கொண்டு போனார். இவ்ளோ தடங்கல் இருந்தாலும் அஜித் சாரால் தான் படம் வெளிவந்தது.
பைக் ரைட்:
என்னால் சாதாரண ஹோட்டலில் சாப்பிட முடியும் ஆனால் அஜித் சாரால் முடியாது. நாங்கள் பைக் ரைட் சென்ற இடத்தில்நானும் அஜித் சாரும் சாதாரன ஹோட்டல்கள் போக முடிந்தது. அஜித் சாருடன் எந்த உதவியாளர்களும் வரவில்லை. அவர்களுடைய வேலையை அவர்கள் தான் செய்து முடிக்க வேண்டும். நீங்க மட்டும் தான் உங்களுக்காக இருக்கும் என்பதை நமக்கு உணர்த்தியது.
அதன் பின் என்ன பைக் வாங்கலாம் என்று அஜித் சாரிடம் ஆலோசனை கேட்டேன்.அதற்கு அவர் BMW பைக் வாங்க சொன்னார். அதற்கான வேலைகள் தான் இப்போ நடந்து வருகிறது என்று ஆரவ் தெரிவித்துள்ளார்.



