ஆர்த்தி ரவி
நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி ரவி விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆர்த்தி ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஒரு ஆண்டாக, நான் என் மௌனத்தை கவசம்போல் சுமந்திருக்கிறேன். பலவீனமாய் அல்ல, என் மகன்களுக்கு அமைதி தேவைப்பட்டதால், என் குரல் அல்ல.
எதையும் நான் எதிர்கொண்டேன்—குற்றச்சாட்டுகள், பழி, கொடூரமான சொற்கள்—எதையும் எதிர்வினையின்றி தாங்கினேன். நான் பேசவில்லை, ஏனெனில் என் பக்கம் உண்மை இல்லை என்பதல்ல, என் குழந்தைகள் பெற்றோரிடையே தேர்வு செய்யும் சுமையை சுமக்க வேண்டாமென நினைத்தேன். என் விவாகரத்து இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
eni
நான் இன்று ஒரு மனைவியாக அல்ல பேசுகிறேன். ஒரு பெண்ணாகவும் அல்ல. என் குழந்தைகளின் நலனையே ஒரே இலக்காகக் கொண்ட தாயாகவே பேசுகிறேன். இப்போது நான் எழவில்லை என்றால், நான் அவர்களை என்றைக்கும் ஏமாற்றிவிடுவேன்.
உங்கள் பொதுவாழ்க்கையில் வேறொரு பாத்திரத்தை ஏற்கலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது. “தந்தை” என்பது வெறும் பட்டமல்ல. அது ஒரு பொறுப்பு. நான் இன்னும் ‘ஆதிரி ரவி’தான். அதையும் நானும் சட்டமும் முடிவெடுக்கும்வரை மாற்றமாட்டேன்.
மீடியாவிற்கு என் பணிவான வேண்டுகோள்: சட்டபூர்வமான விவாகரத்து முடிவடையும் வரை எனக்கு “முன்னாள் மனைவி” என்ற பட்டத்தை வழங்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
3வது நபரே காரணம்?
இன்னும் “அப்பா” என அழைக்கும் என் இரண்டு மகன்களுக்காக… அவர்களுக்காகவே நான் ஒருபோதும் பின்னடைவதில்லை. தனது ரகசிய வாழ்க்கை காப்பாற்ற முடியாமல் போனதால் வீட்டை விட்டு வெளியேறினார். நானும் ரவி மோகன் பிரிய காரணமே அந்த முன்றாவது நபர். விவாகரத்து தாக்கல் செய்யும் முன்பே எங்களுடைய வாழ்க்கையில் வந்துவிட்டார் என்று ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.