Saturday, April 18, 2026

நம்ப என்ன பண்ணாலும் சிலருக்கு பிடிக்காது, ரொம்ப பயமா இருக்கிறது.. நடிகை லாஸ்லியா வேதனை!!

லாஸ்லியா

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. ஆனால் அவர் நடித்த படங்களுக்கு மக்கள் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் ஹரி பாஸ்கர் நடிப்பில் வெளிவந்த ஹவுஸ் கீப்பிங் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பெருமை அடைகிறேன்!

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய லாஸ்லியா, பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், என்னை நினைத்து நான் பெருமை அடைகிறேன். எனக்கு பிக் பாஸ் கிடைக்கும் போது எதிர்பாராமல் எல்லாமே நடந்தது தான். அதுக்கு அப்பறம் கேரியர் எப்படி பெரிது படுத்துவது குறித்து எனக்கு தெரியாது. ஒரு கதையை கேட்டு அதை எப்படி ஓகே செய்வது என்பதும் எனக்கும் தெரியாது. ஏன்னென்றால் நான் என்னுடைய குடும்பம் சினிமா துறையை சேர்ந்தவர்கள் இல்லை. என்னுடைய நண்பர்களும், அந்த துறை சார்ந்தவர்கள் யாரையும் தெரியாது. இந்த நிலைமையிலும் நான் இப்போது வரை படம் பண்ணிக்கொண்டு இருப்பதை நினைக்கும் போது எனக்கு பெரிய விஷயமாக பார்க்கிறேன். ‘பரவலா இன்னும் வர படம் பன்றோம்’ என்பதை நினைத்து பார்க்கும் போது இன்னும் பெருமை அடைகிறேன்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு வர வேண்டும் என்பது எனக்கு ஆசையாக இருந்தது. எந்த விஷயத்தை சின்ன இடத்தில் முடித்துவிட கூடாது என்பதில் ஆர்வமாக இருப்பேன். எங்க ஊரில் trincomalee இருந்து colombo போக கூட என்னுடைய வீட்டில் விடமாட்டார்கள். ஸ்கூல் முடித்த பிறகு சும்மா வீட்டில் இருக்க கூடாது என்ற எண்ணம் இருந்தது. இந்தியா போனும் சென்னை போக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இங்க தனியா வந்தேன், இப்போ படம் பண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

பயமாக இருக்கிறது:

எனக்கு ரொம்ப பயம் இருக்கு, பேசறதுக்கு பயம், நானா இருக்கிறத கூட பயமா இருக்கு. ஒரு விஷயத்தை பேச அவ்ளோ நேரம் யோசிக்க வேண்டும். அது நல்ல விஷயமா, கெட்ட விஷயமா இருக்கலாம். என்னுடைய பாஸ்ட் நடந்த விஷயமாக இருக்கலாம். ரொம்ப யோசிப்பேன், பேசுறதாக இருக்கட்டும், ஒரு நண்பர் கூட பழகுவதாக இருக்கட்டும் எல்லாமே எனக்கு பயமாக தான் இருக்கிறது.

நம்மள பிடித்தவர்கள் இருக்காங்க, பிடிக்காதவங்க இருக்காங்க.. நம்ப என்ன பண்ணாலும் சிலருக்கு நம்மளை பிடிக்காது. அது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு ரொம்ப பயம் இருக்கிறது. அதை எப்படி சொல்வது என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

நான் பிக் பாஸ் போனதாக இருக்கட்டும், என்னுடைய வாழ்க்கை பயணமாக இருக்கட்டும் அப்போது எல்லாம் எனக்கு பயம் இல்லை. ஆனால் இப்போது ரொம்ப பயமாக இருக்கிறது. அந்த நேரத்தில் என்னுடைய பெற்றோர்கள் இருந்தார்கள், என்னை பாத்துக்கொள்ள என் அப்பா இருந்தார். அப்போது எல்லாம் ரொம்ப தைரியமாக முடிவு எடுப்பேன். ஆனால் இப்போ அப்படி இல்லை என்று லாஸ்லியா தெரிவித்துள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles