குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட செய்யாறு பாலு, மதராஸி படம் குறித்து பேசி இருக்கிறார். அதில், சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயன் சம்பந்தபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் அமீர் சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அமீரை பார்த்த உடன் மரியாதை நிமர்த்தமாக, எழுந்து நின்று இருப்பார். அதை பார்த்த அமீர், இது எல்லாம் கொஞ்சம் நாள் தான். அப்பறம் பாருங்க என்று சொல்லுவார். என்ன வெறுப்பில் இருந்தார் என்று தெரியவில்லை ஓபன்னாக பேசிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில், நான் சமீபத்தில் பார்த்து மிரண்டு போன ஒரே நடிகர் சிவகார்த்திகேயன் என்று அமீர் கூறியிருந்தார். இப்படி மாற்றி மாற்றி பேசுவது சினிமாவில் சாதாரண விஷயம். இப்படி எல்லாம் நடக்கும்.
இந்த மாதிரி சிவர்கார்த்திகேயன் பல பிரச்சனைகளை தாண்டி இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார். ஒருவருக்கு சீக்கிரம் பணம், புகழ் கிடைக்கிறதோ அந்த இடத்தில் அரசியல் இருக்கும். சிவகார்த்திகேயன் மீது தொடர்ந்து வந்த ஒரே குற்றச்சாற்று, அவருக்கு ஆக்ஷன் படங்களில் நடிக்க முடியாது என்பது தான். அமரன் படம் பயோபிக் அதிலும் பெரிய ஆக்ஷன் காட்சி இல்லை என விமர்சனம் வந்தது.

விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கொடுத்து நீங்க தான் இனி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி தளபதி பட்டத்தை அவருக்கு கொடுத்துவிட்டு போய்ட்டார். ஆனாலும் நவீன பாக்யராஜ் மாதிரி நடிக்கிறார் என்ற விமர்சனம் இருந்தது.
அமரன் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இப்படம் ரூ 300 கோடி மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், அமரன் படத்திற்கு 6 மாதத்திற்கு முன்பே மொத்த சம்பளத்தையும் கொடுத்துவிட்டார் என்று தெரிவித்து இருந்தார்.
சிவகார்த்திகேயன் – ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு மாதரசி என்று டைட்டில் வைத்துள்ளனர். படத்தில் நிறைய கார்கள் இருப்பது போன்ற காட்சி இருந்தது. இந்த படம் கார்கள் சம்பந்தப்பட்ட படமாக இருக்குமா? இல்லை..தீவிரவாதிகள் மையப்படுத்தி எடுத்துள்ளார்களா என்பது படம் வெளிவந்த பிறகு தான் தெரியும். ஆனால் படம் மட்டும் அக்ஷன் படமாக இருக்கும் கணிக்கமுடிகிறது.
சிவகார்த்திகேயன் மீது வந்து இருக்கும் விமர்சனங்கள் எந்த நடிகர் மீது வந்து இருக்காது. அந்த அளவுக்கு விமர்சனங்களை கடந்து வந்து இருக்கிறார். உச்ச கட்ட பிரச்சனைகளை சந்தித்து, அவருடைய படங்கள் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் திறமையான நடிகர் என்பதை தாண்டி மிகவும் புத்திசாலியான நடிகர் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.



