Saturday, April 18, 2026

விஜய் சேதுபதி உடன் நடிக்க மாட்டேன்.. நடிகை வடிவுக்கரசி ஓபன் டாக்!!

80, 90 களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் வடிவுக்கரசி. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இவர் பலா விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர்,வைதேகி காத்திருந்தேன் படத்தில் விஜய் காந்த் சாருடன் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது அவரிடம், சார் நான் படம் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம், எதாவது ஐடியா கொடுங்க சார் என்று சொன்னேன். அதற்கு அவர், இப்போதய காலகட்டத்தில் மோகன் தான் ரொம்ப பிரபலமாக இருக்கிறார். நீங்கள் தான் அவருடன் படங்களில் நடித்து வருகிறீர்கள் அவர் வைத்து படம் பண்ணுங்க. அவருடைய டேட் கேளுங்க என்று விஜயகாந்த் சார் கூறினார்.

மோகன் சார் இரண்டு வருடத்திற்கு டேட் இல்லை என்று சொல்லிவிட்டார். திருப்பி விஜயகாந்த் சாரிடம் சென்று, மோகன் சார் டேட் கொடுக்கவில்லை, நீங்கள் கதையை கேட்டு கொஞ்சம் கேட்டு பாருங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர், எனக்கும் டேட் இல்லை, பாய் வேற டேட் கொடுக்கமாட்டான் ..சரி வந்து சொல்லுங்க என்றார். அந்த படத்திற்கு சிவச்சந்திரன் தான் கதை, பில்லா க்ரிஷணன் இயக்குனர். விஜயகாந்த் சாருக்கும் கதை பிடித்ததனால் படம் பண்ணார். என்னை முதலில் தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திய விஜயகாந்த் சார் தான். அவ்ளோ பிஸியான நேரத்திலும் எனக்காக படம் பண்ணார். அந்த படம் எனக்கு நஷ்டம் கிடையாது , பெரிய லாபமும் கிடையாது.

 

விஜய் சேதுபதி சில படங்களில் நடித்து இருக்கிறோம. அந்த காலத்தில் ஷூட்டிங்கில் என்ன சுவாரசியமாக நடந்து என்பதை என்னிடம் கேட்டு தெரிந்துகொள்வார். விஜய் சேதுபதியும் விஜயகாந்த் சார் போல தான். அவர் பேசும் விதம், நிறைய குணங்கள் ஒரே மாதிரி இருக்கும். எல்லா மக்களையும் ஒன்னு சேக்குறது. மேலும் எல்லா நடிகர்கள் உடன் சமமாக பழகுற விதம் இதெல்லம் விஜய் சேதுபதி கிட்ட புடிச்ச விதம். அவரு எனக்கு புள்ள மாதிரி.

என்னுடைய நண்பர்கள் விஜய் சேதுபதி சாரிடம் போட்டோ எடுக்கணும் என்று என்னிடம் சொன்னார்கள். அது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் சொன்னேன். உடனே வந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அந்த சமயத்தில் என்கிட்ட வந்து நம்ப இரண்டு பெரும் சேர்ந்து படம் பண்ணும் அம்மா என்று சொன்னார். அதற்கு நான் அதெல்லாம் வேண்டாம், எனக்கு நீங்க என்னுடைய புள்ள நான் உங்களுக்கு அம்மா.. நம்ப உறவு நீடிக்க வேண்டும் என்றால் அந்த காமேற்சியல் வேண்டாம் என்றேன். நடிக்கிறோம் என்றால் சிலர், இதனால் அந்த சோசியல் மீடியாவில் உங்க கிட்ட பேசுறாங்க, பழகுறாங்க என்று யாராவது சொல்லிவிடுவார்கள். அதெல்லாம் வேண்டாம். எனக்கு உங்க பேசுறேன், பழகுறேன் அது போதும் வேற எதுவும் வேண்டாம். கடைசி வரை நீங்கள் புள்ளையா இருக்கணும். விஜயகாந்த் எப்படியோ அதே மாதிரி தான் விஜய் சேதுபதியும் என்று வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles