மகிழ் திருமேனி – அஜித் கூட்டணியில் வெளிவந்த விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும், உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறத.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன், சினிமா தொடர்பான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், காதலர் தினம் முன்னிட்டு என்னுடைய இரண்டு படங்கள் திரைக்கு வரவுள்ளது. ஒன்று, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2K லவ் ஸ்டோரி. இந்த படமும் மிக அருமையாக வந்து இருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு படம் அமைந்துள்ளது. உண்மையில் இந்த படம் எனக்கு பிடித்து இருக்கிறது. அடுத்ததாக காதல் என்பது பொதுவுடைமை இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை பார்த்து பத்ரிக்கையாளர்கள் பாராட்டினார்கள். மலையாள படங்களை எப்படி கொண்டாடிக்கிறமோ அதே போல இந்த படத்தையும் வெற்றி பெற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து இருந்தார்கள்.
2K லவ் ஸ்டோரி படம் இளைஞர்களும், பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படமாக இருக்கும். குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பல விஷயங்கள் பெற்றோர்களுக்கு இருக்கிறது. இந்த தலைமுறைக்கு நிறைய புரிதல் கிடைக்கும்.
விடாமுயற்சி படம் 900 screen-ல் படம் வெளியானது. இப்போது படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிறது. அதனால் 900 ல் இருந்து 500 screen வந்து இருக்கும். இதனால் நமக்கு 400 screen கிடைக்கிறது. பெரிய படங்கள் பொறுத்த வரை முதல் வாரத்தில் மொத்த காலெக்ஷன் எடுத்துவிடுவார்கள். அடுத்தடுத்து வாரங்களில் வரும் வசூல் போனஸ் தான். விடாமுயற்சி படம் முதல் வாரத்திலேயே நல்ல வசூல் செய்தது. வர வாரத்தில் தமிழ் நாட்டில் மட்டும் ரூ 100 கோடி மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் பார்த்தால் 200 கோடிக்கு மேல் வரலாம். அது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிப்பார்கள்.
விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும், பரவலான மக்களுக்கு படம் ரொம்ப பிடித்து இருக்கிறது. அஜித் சார் படத்தில் யார் யாரோ நடிக்கிறர்கள், சுமாரான படம் என்று சொன்னாலும் பலருக்கும் இந்த படம் பிடித்து இருக்கிறது. அதற்கு காரணம் படத்தில் நிறைய தத்துவங்கள் கூறியுள்ளனர். அஜித், திரிஷா ஆகியோர் படத்திற்கு தங்களின் பங்களிப்பை அருமையாக கொடுத்துள்ளனர். ஒரு சிலருக்கு படம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வெகுஜன மக்கள் பிடித்து படமாக இருக்கிறது. சிலர் பொய்யான பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்னனர். எப்போதும் தயாரிப்பு நிறுவனம் வசூல் விவரங்களை சொல்வதை சரியானதாக இருக்கும் என்று தயாரிப்பாளர் தனஞ்சயன் கூறியுள்ளார்.



