அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ராகன்திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 21 ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை AGS நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அர்ச்சனா கல்பாத்தி, ட்ராகன் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், படத்தின் டைட்டில் கதையோடு ஒத்துப்போக வேண்டும். அப்படி தான் படத்தை தேர்வும் செய்து வருகிறோம். இப்போ பெரிய படங்கள் எல்லாரும் மொழி மக்களும் பார்க்கிறார்கள் . லவ் டுடே படத்தின் தலைப்பு படத்திற்கு பொருத்தமாக இருந்தது. அதனால் வைத்தோம். ட்ராகன் படத்தின் தலைப்பு குறித்து படத்தில் விளக்கம் இருக்கும்.
ரிலீஸ் ஆகவிருக்கும் அந்த வாரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் வரலாம் . ஆனால் ஐந்து அல்லது ஆறு படங்கள் வரும் போது தான் பிரச்சனையே. இப்போது விடாமுயற்சி மாதிரி பெரிய படம் வரும் போது அவர்கள் நிறைய பட்ஜெட் வைத்து அந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது பல திரையரங்குகளில் வெளியாக வேண்டும். இது எல்லா பெரிய ஸ்டார் படங்களுக்கும் பொருந்தும். மீடியம் பட்ஜெட் படங்கள் என்றால் பிரச்சனை இல்லை, 1000 திரையரங்குகளில் படத்தை ரீலிஸ் செய்ய முடியாது.
எங்களுடைய படம் வெளியாகும் அதே நாளில், தனுஷின் நீலாவுக்கு என்னடி என்மீது கோபம் படமும் வெளியாக இருக்கிறது. தனுஷ் எனக்கு நல்ல நண்பர். பவிஷ் உடைய அம்மாவும் எனக்கு ரொம்ப நெருக்கம். இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இப்படி தான் இளம் நடிகர் தமிழ் சினிமாவிற்கு வர வேண்டும். இது முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் கதை சொல்லும் போது என்னுடைய கதையை கேட்டு சிரித்தார். அவர் இதுவரை அப்படி சிரித்தது இல்லை. அந்த படத்தை தயாரிக்க எங்க அப்பா ஓகே சொல்லிவிட்டார். அப்போது பிரதீப் ஒரு கண்டிஷன் வைத்தார் அது என்னவென்றால் இந்த படத்தில் நான் தான் ஹீரோவாக நடிப்பேன் என சொன்னார். லவ் டுடே படத்தின் குறும்படத்தையும் படத்தையும் காண்பித்தார். அதை பார்த்த உடன், சரி என்று கூறிவிட்டார். பிரதீப்பிடம் எந்தவொரு தப்பான பழக்கமும் இல்லை. நல்ல மனிதர், attitude காட்டமாட்டார். இந்த படம் முடித்த பிறகு வேறொரு படம் பண்ணுவோம்.
பிரதீப் ரங்கநாதன் படங்களில் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று இணையத்தில் சிலர் பதிவிட்டு இருந்தனர். அதை நானும் பார்த்து இருக்கிறேன். ஒரு பெண்ணாக அந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன. பிரதீப் அந்த கண்ணோட்டத்தில் படம் எடுக்கவில்லை. அவர்கள் படத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று தான் சொல்லவேன். அப்படி இருந்து இருந்தால் படம் பண்ணி இருக்க மாட்டோம் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.



