அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளிவந்தது. ஒரு பக்கம் படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும், மறுபக்கம் படம் வசூல் வேட்டையை நடித்தி வருகிறது.
சமீபகாலமாக இயக்குனர் மகிழ் திருமேனி, பல பேட்டிகளில் விடாமுயற்சி படம் தொடர்பாக பல்வேறு தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து சுவாரசிய தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், நான் விடாமுயற்சி படம் ஆரம்பிக்கும் சமயத்தில் அஜித் சாருடன் முதலில் பேசிய விஷயம், மகிழ் திருமேனி என்னை சார் என்று அழைக்காதீர்கள் என்னை அஜித் என்று கூப்பிடுங்கள் நான் உங்களை மகிழ் என்று அழைக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நான் சார் நீங்கள் வேண்டுமானால் என்னை மகிழ் என்று கூப்பிடுங்கள் நான் உங்களை சார் என்றே அழைக்கிறேன் என்று கூறினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் சில சமயங்களில் என்னை சார் என்று அஜித் சார் அழைப்பார். என்னை மற்றுமின்றி என்னுடைய உதவி இயக்குனர்களையும் சார் என்று அழைப்பார். எல்லாருக்கு ரொம்ப மரியாதை கொடுத்து பேசுவார். சமீபத்தில் கூட என்னை தல என்று அழைக்காதீர்கள், AK அல்லது அஜித் குமார் என்று கூப்பிடுங்கள் என்று சொல்லி இருந்தார்.

அஜித் சார் பேட்டிகளில் ஏன் கலந்துகொள்ள மாட்டிக்கிறார் என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அஜித் சார் படம் ஆரம்பிக்கும் போதே படத்தின் எந்தொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார். ஒரு படம் நன்றாக இருந்தால் அதுவே ஓடும் ப்ரோமோஷன் நிகழ்ச்சி எல்லாம் தேவையில்லை என்பது அவருடைய கருத்து. அதை தான் அவரும் பின் தொடர்கிறார். அப்படி இருக்கும் போது அவருடைய கட்டாயப்படுத்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வைப்பது மிகவும் தவறான விஷயம். அஜித் சாருடன் மீண்டும் கூட்டணி வைக்கிறேனா என்பது குறித்து தொடர்ந்து கேள்விகள் வந்துகொண்டே இருக்கிறது. அது தொடர்பான தகவல்களை அஜித் சார் தான் சொல்லுவார்.
மேலும், விடாமுயற்சி படத்தில் அஜித் சார் மிக அருமையாக நடித்திருந்தார். ஒவ்வொரு காட்சிகளும் அஜித் சார் தனது பெஸ்ட் கொடுத்து இருந்தார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கயல், “நான் இவ்ளோ பண்ணியும் என்னை எதற்கு காப்பாத்துனீங்க என்று கேப்பார். அதற்கு அஜித் சார், i love you என்று அழகா சொல்லி இருப்பார். அந்த காட்சி மிகவும் அருமையாக வந்து இருந்தது. அதுமட்டுமின்றி திரிஷாவும் ஒரு காட்சியில் உண்மையில் கண்கலங்கி நடிப்பார். அதை பார்த்து இன்னொரு நடிகையும் கண்கலங்கிவிடுவார். அவ்ளோ நன்றாக திரிஷா இந்த படத்தில் நடித்து இருக்கிறார் என்று மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.



