Friday, April 17, 2026

6 நாட்களில் விடாமுயற்சி திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா? லேட்டஸ்ட் தகவல்..

சமீபத்தில் தமிழ் நாட்டில் சென்சேஷனல் டாபிக்காக விடாமுயற்சி திரைப்படம் சென்று கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விடாமுயற்சி படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த வாரம் இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு விடாமுயற்சி படம் செய்து வரும் வசூல் மற்றும் விமர்சனங்கள் தொடர்பாக பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில், விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆக போகிறது. 6 நாட்களில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுக்கட்டும், மொக்க படம் என்று சொல்லட்டும், படம் சுமார் என்று சொல்லட்டும். ஆனால் படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. இதுவும் படம் பார்த்தவர்கள் சொன்ன விஷயம் தான்.

புக் மை ஷோவில் அதிக புக் செய்யப்பட்ட படம் இதுதான் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. இன்னும் விடாமுயற்சி படம் உலக அளவில் 3650 screen-களில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு படம் நன்றாக இல்லை screen -ல் இருந்து எடுத்துவிடுவார்கள். அடுத்த வாரம் புது படங்கள் வெளியாகவுள்ளது. இருப்பினும் விடாமுயற்சி திரையரங்குகளில் ஓடும் அதற்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஒரு படத்திற்கு எவ்ளோ ஆடியன்ஸ் வாரங்க என்பதை திங்கள் கிழமை தினம் தான் முடிவு செய்யும். அந்த தினத்தில் கடந்த ஆண்டில் அதிக புக் செய்யப்பட்ட படங்களில் அமரன் படம் முதலில் இருக்கிறது. இரண்டவது படம் கோட், மூன்றாவது படம் வேட்டையன், நான்காவது படம் தான் விடாமுயற்சி.

வெளிநாடுகளில் பல இடங்களில் விடாமுயற்சி திரைப்படம் திரையிடபட்டது. முக்கிய தமிழர்கள் அதிகமாக இருக்கிற நாடு மலேசியாவில், விடாமுயற்சி திரைப்படம் 3.7 மில்லியன் வசூல் செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

சமீபத்தில் மகிழ் திருமேனி பேட்டியில் கலந்துகொண்டு மாற்றி மாற்றி பேசியிருக்கிறார். ஒரு பேட்டியில்,
பிரகாஷ் கதாபாத்திரத்தை அஜித் சார் வைக்க சொன்னார், அந்த கதாபாத்திரத்தை ஓபன்னாக வைத்திவிடுங்கள் என்றும் அவர் தான் கூறினார் என தெரிவித்திருந்தார். இன்னொரு பேட்டியில் பிரகாஷ் கதாபாத்திரத்தை கொண்டுவராமல் இருந்து இருக்கலாம் என்று சொல்கிறார். ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேலை அடுத்தடுத்து பேட்டிகள் கொடுக்கும் போது அவரே குழப்பிவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அது மட்டும் இல்லாமல் படத்திற்கு கலவையான நெகடிவ் விமர்சனங்கள் வரும் போது குழம்பிவிடுவார்கள். அந்த pressure ல் தான் மகிழ் திருமேனியும் இருக்கிறார் என பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles