மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து பேசி இருக்கிறார். அதில், விடாமுயற்சி படம் என்னுடைய கதை இல்லை. எனக்கு ஒரு சின்ன பயம் இருந்துகொண்டே இருந்தது. ஏன்னென்றால் படத்தில் ஹீரோ அஜித் சாருக்கு ஒரு இமேஜ் இருக்கு, நானும் ஆக்ஷன் படங்கள் பண்ணி இருக்கிறேன். அதனால் என்னுடைய இமேஜ் வேற மாறி இருக்கும். அப்போது நாங்கள் இருவரும் இணையும் போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இந்த படம் முழுக்க அச்டின் த்ரில்லர் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் படத்தில் பர்ஸ்ட் ஆப் முழுவதும் அஜித் சார் ரிசீவர் ஹண்ட்ல் தான் இருந்தார். அடி வாங்க படுகிறார், கேலிக்கு உள்ளாக்கப்படுகிறார். அவருடைய கல்யாண பந்தத்தில் இவ்ளோ பிரச்சனைகள் இருக்கிறது. இதை எல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வியும், பயமும். அச்சமும் இருந்தது.
நான் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது, கொஞ்சம் நேரத்தில் தியேட்டர் அமைதியாக ஆரம்பிக்கிறது. திரிஷா வந்து உறவு சிக்கல் குறித்து பேச ஆரம்பிக்கிறார்கள். அதன் பின் குற்றம் ஒன்று நடக்குது. அப்போதும் மக்கள் அமைதியாக தான் இருந்தார்கள். செகண்ட் ஆப்பில் அஜித் சார் திருப்பி அடிக்கும் போது தியேட்டரில் சத்தம் வந்தது. அப்போது நானும் படமும் காப்பாற்ற பட்டது நினைவுக்கு வந்தது.

இந்த படம் எனக்கு கொடுக்கப்பட்ட assignment. இந்த கதை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இந்த கதையின் போக்கு தீர்மானிக்கப்பட்டு இருந்தது. இதனால் எனக்கு கொடுத்த வேலையை மட்டும் தான் நான் செய்தேன். படத்தின் 90% கிரெடிட் அஜித் சாருக்கு தான் சேரும். எனக்கு அஜித் சார் வைத்து மாஸ் ஆக்ஷன் படம் பண்ண வேண்டும் என்று தான் நினைத்தேன். எனக்கு தான் என்னுடைய ஆசையும். ஆனால் நம்ப sensible படம் பண்ணலாம். எதற்கும் கவலை பட வேண்டாம் . யாரு என்ன சொல்வார்கள் என்பதை குறித்து கவலை பட வேண்டாம். வரவேற்பு குறித்து கவலைப்பட வேண்டாம். நான் என்னுடைய comfortable இருந்து வெளியே வருகிறேன். நீங்களும் வாங்க..என்று சொன்னார்.

பிரேக்டவுன் படம் குறித்து கேள்விக்கு? பதில் அளித்த மகிழ் திருமேனி.’இந்த படம் எனக்கு கொடுத்த experiment, இந்த படம் குறித்து இப்போது பேச சரியாக இருக்காது. சில மாதங்களுக்கு பிறகு இந்த படம் குறித்து முழுமையாக பேசலாம். நான் எதுவும் மறைக்க நினைக்கவில்லை. இந்த படத்தை நான் தான் இயக்கி இருக்கிறேன். இது என்னுடைய படம். நேரம் வரும் போதுஇந்த படம் குறித்து முழுமையாக பேசலாம் என்று மகிழ் திருமேனி கூறியுள்ளார்.



