Monday, March 2, 2026

விடாமுயற்சி படத்திற்கு மோசமான விமர்சனம்..அஜித் எடுத்த அதிரடி முடிவு!! பிரபலம் சொன்ன தகவல்..

விடாமுயற்சி:

நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்து. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு விடாமுயற்சி திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், விடாமுயற்சி படம் குறித்து மகிழ் திருமேனி சொன்ன விஷயம் , இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்க வேண்டும். பெரிய ஹீரோ படம் போல இருக்காது, மாஸ் டயலாக் இருக்காது, மசாலா சாங் இருக்காது. எதையும் எதிர்பார்க்காமல் படம் பார்க்க வாங்க என்று கூறியிருந்தார். அதற்கு மகிழ் திருமேனி மீது கோபம் கொண்டார்கள். இதற்கு காரணம் சமீபத்தில் வெளிவந்த பெரிய ஹீரோக்கள் படங்கள் தான். குறிப்பாக சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்திற்கு மிக பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்து இருந்தது.

விமர்சனம்:

விடாமுயற்சி திரைப்படத்தின் விமர்சனம் கலவையாக வருகிறது. சிலர் படம் சூப்பராக இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர், படம் கொஞ்சம் கூட நல்லா இல்லை என்று சொல்கிறார்கள். அதை எல்லாம் தாண்டி அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் அவர், படத்தில் அஜித் நிறைய நபர்களிடம் அடி வாங்குகிறார், மாஸ் சீன் இல்லை, ஓப்பனிங் இல்லை என்ற விமர்சனங்கள் வருகிறது. இருப்பினும் விடாமுயற்சி திரைப்படம் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் படத்தின் வெற்றியை பாக்ஸ் ஆபிஸ் தான் தீர்மானிக்கிறது. விடாமுயற்சி படத்தை ஹிட் லிஸ்டில் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.

குட் பேட் அக்லி:

விடாமுயற்சி படத்திற்கு எதிர்மறையாக குட் பேட் அக்லி திரைப்படம் இருக்கும். இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு இந்த அந்த படம் இருக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் தீவிர ரசிகர். இதை அவர் பல மேடைகளில் கூறியுள்ளார். ரசிகர்கள் கொண்டாடும் வகையில் குட் பேட் அக்லி திரைப்படம் இருக்கும். இப்படத்தின் டீசர்வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் படம் வெளியாக இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளும், படத்தின் அப்டேட்களும் அடுத்தடுத்து இருக்கும்.

இப்படத்திற்கு பிறகு அக்டோபர் மாதம் அஜித் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க போகிறார். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் குமார் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles