Sunday, April 19, 2026

நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம்.. அவரே சொன்ன விஷயம்!!

தமன்னா

இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை தமன்னா. இவர் 2006ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் முலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், நீண்ட நாட்களுக்கு பின்னர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா எனப் பல முன்னணி பிரபலங்கள் படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் தமன்னா நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. அதனால் பாலிவுட் பக்கம் சென்றார். ஜீ கார்டா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அதன் பின் தமன்னா, ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற
காவாலா பாடலுக்கு அவர் நடனமாடி தமிழில் ட்ரெண்டிங்கில் வந்தார். அதில் கவர்ச்சி நடனம் ஆடி பிரமிக்க வைத்தார். இதைத்தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4ல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக மிக பெரிய பெற்றது. தமிழில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு ஹிட்டை பெற்றார். மேலும் தமிழில் சில படங்களில் அவர் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

டேட்டிங்:

தமன்னா ஹிந்தியில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் தொடரில் நடிக்கும் போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்க்ள் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இருவரும் தங்களது காதலை உறுதி செய்திருக்கிறார்கள்.

திருமணம்!!

இந்நிலையில் தமன்னாவின் திருமணம் தொடர்பான தகவல் சமூக வலைத்தளங்களில் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி சமீபத்தில் தமன்னா அளித்த பேட்டியில், வருகிற 2025ஆம் அண்டு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தமன்னா – விஜய் வர்மா திருமணமானது அடுத்த வருட தொடக்கத்திலேயே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது மார்ச் மாதத்துக்கு நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles