Friday, April 17, 2026

தெலுங்கு நடிகரை டேட்டிங் செய்கிறாரா மீனாட்சி சவுத்ரி? அவரே சொன்ன தகவல்

மீனாட்சி சவுத்ரி

தமிழ், மலையாளம், தெலுங்கு பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் மீனாட்சி சவுத்ரி. மாடல் அழகியான இவர் , விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் ஆர் பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் கவலையான விமர்சனமே கொடுத்தனர். இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் படத்தில் நடிக்க நடிகை மீனாட்சி சவுத்ரிக்கு வாய்ப்பு கிடைத்தது.

கோட் படத்தில் சில காட்சிகளிலேயே வந்திருந்த போதிலும் கிளாமரும், ஸ்டைலிஷ்ஷான லுக்கில் மீனாட்சி சவுத்ரி ரசிகர்களை கவர்ந்திருந்தார். குறிப்பாக ஸ்பார்க் பாடல் காட்சியில் கிளாமரான உடையில் நடனமாடி இளசுகளை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

மீனாட்சி சவுத்ரி கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாட்டமாக வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பான் இந்திய படமாக வெளியான லக்கி பாஸ்கர் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தனர்.

டேட்டிங்:

இந்நிலையில் மீனாட்சி சவுத்தரி, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நாகர்ஜுனாவின் அக்கா மகனும் நடிகருமான சுஷாந்த் அனுமோ காதலித்து வருவதாகவும் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது.

வதந்திகளுக்கு பதிலடி:

தற்போது இது தொடர்பாக பேசிய நடிகையின் மீனாட்சி சவுத்ரி ,” இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது போன்ற செய்திகள் எங்கிருந்துதான் வருகின்றன என்று எனக்கு தெரியவில்லை. இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். மற்ற விஷயங்களில் எனக்கு ஆர்வம் இல்லை என்று மீனாட்சி சவுத்ரி இந்த விஷயம் வருத்தத்தை தருகிறது. அவர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். தான் பல படங்களில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பிரபாஸ் நடிப்பில் உருவாகும் சலார் 2 படத்தில் தான் நடிக்கவில்லை. நான் நடிப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் உண்மை என்று விளக்கம் அளிக்த்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles