Friday, April 17, 2026

இதுவரை அமரன் திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?

அமரன்

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் கடந்த 31 அக்டோபர் தீபாவளிக்கு வெளியானது. இப்படத்தில் சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இப்படம் இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். இந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த விஷயம்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்!!

விமர்சனம்

ராணுவத்தில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டை போலவே ஆந்திரா மற்றும் கேரளாவிலும் அமரன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும், புக் மை ஷோ போன்ற டிக்கெட் புக்கிங் தளத்தில் படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி நாளுக்கு நாள் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. இப்படத்திற்கு பலரும் மோசமான விமர்சனங்களை கொடுத்தனர். இந்நிலையில் அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், பிரின்ஸ் திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆனால்
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அமரன் திரைப்படம் மிஸ்ஸே ஆகாது கன்ஃபார்மாக வெற்றி பெறும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தார். ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சொன்னது போல அமரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறது.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்:

அமரன் திரைப்படம் அதிகபட்சம் 200 கோடி வசூலை அள்ளும் என்று முன்னணி நடிகர் அஜித்தின் கடைசி படமான துணிவு படத்தின் வசூலை மிஞ்சும் என்றும் சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்தது. இந்த நிலையில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகும் வரை அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்று கூறப்படுகிறது .

தற்போது 8 நாட்களை கடந்துள்ள சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூபாய் 189 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 200 கோடியை கடந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த வாரமும் அடுத்த வாரமும் இதே போல படம் ஓடினால் 250 கோடி முதல் 300 கோடி வசூலை லைஃப் டைம் வசூலாக அமரன் அள்ளும் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles