அனுஷ்கா ஷெட்டி
தமிழ், தெலுங்கு இரு மொழியிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருந்த பெண்களுக்கு முக்கியத்துவம் இப்படத்தில் அனுஷ்கா வெளிப்படுத்திய நடிப்பு பலரால் கொடுக்கும் கதைகளிலும் நடித்து வந்தார். தற்போது அனுஷ்கா தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடிக்கிறார். இந்தச் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

From Tamil Review – மயக்கும் மிஸ்டரி & ஹாரர் கலந்த தொடர்!
யோகா டீச்சரான அனுஷ்கா கடந்த 2005ம் ஆண்டு நாகார்ஜுனா நடிப்பில் வெளியான சூப்பர் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். கிளாமர், திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக அந்த படத்தில் வலம் வந்த அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
அதன் பின் வுமன் சென்ட்ரிக் ஜானரில் உருவான அருந்ததி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. குறுகிய காலத்தில் பிரபலமான அனுஷ்கா, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தாலும், அனுஷ்காவின் அலை கோலிவுட்டிலும் அடிக்க ஆரம்பித்தது.
இப்படத்தை தொடர்ந்து வேட்டைக்காரன், சிங்கம், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தார். முக்கியமாக ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் கொண்டு சேர்த்தது. இப்படத்திற்கு பின்பு அனுஷ்காவின் மார்க்கெட் உச்சம் தொட்டது.
சினிமாவில் பீக்கில் இருந்த அனுஷ்கா, ஆர்யாவுடன் சேர்ந்து இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டினார். இப்படம் படம் படுதோல்வி அடைந்தது. மேலும் ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் அனுஷ்கா தடுமாறினார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இருப்பினும் அனுஷ்கா மீதான கிரேஸ் ரசிகர்களுக்கு இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது.
தற்போது அனுஷ்கா மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். கடந்த ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸஸ் பொலிஷெட்டி படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து கிரிஷ் இயக்கத்தில் காட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்களுக்கு முக்கித்துவம் கொடுக்கும் கதை அம்சக்தில் உருவாகி வருகிறது. மேலும், மலையாளத்தில் காத்தனார் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

காதல்
பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்மற்றும் பாகுபலி படத்தில் நடிக்கும் போது நடிகர் பிரபாஸ் உடன் அனுஷ்கா கிசுகிசுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. டீ+அதுமட்டுமின்றி அவர்களுக்குள்ளான காதலில் பிரபாஸ் தரப்பிலிருந்து சில பிரச்னைகள் வந்ததாகவும் இதன் காரணமாக பிரிந்ததாக சொல்லப்படுகிறது.
சொத்து மதிப்பு
இந்நிலையில் தற்போது அனுஷ்கா 43 பிறந்த நாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி காட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்தது. இந்த சூழல் அனுஷ்காவின் சொத்து விவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி அனுஷ்கா ஒரு படத்திற்கு ரூபாய் 6 கோடி சம்பளமாக வாங்குகிறார். இவருக்கு மொத்தம் 130 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.



