இந்த வாரம் OTT-யில் புதிதாக வெளியான தமிழ் டப்டு திரைப்படங்கள் & தொடர்கள் தொடர்பாக நமது சினிடாக்கீஸ் பக்கத்தில் பார்க்கலாம் வாங்க..
1. In Your Dreams
இந்த தொடர் Netflix தளத்தில் வெளியாகி இருக்கிறது..
IMDb ரேட்டிங்: 7.6/10
ரெண்டு சின்ன பசங்க — ஸ்டீவி மற்றும் எலியட் — கனவு உலகத்துக்குள் சென்று ‘ஸன்பேன்’ என்ற கனவு கடவுளிடம் ஒரு Perfect Family-க்கான வேண்டுகோளை வைக்கிறார்கள்.
அவர்களின் அதிசயமான கனவு பயணத்தில் என்ன நடக்கிறது என்பதே core story.

2. Last Samurai Standing
இந்த தொடரில் மொத்தம் 6 எபிசொட் இருக்கிறது.
சமுராய்கள் காலம் முடிவதற்கு முன், ஒரு கொடூரமான ‘Survival Game’இல் கலந்து கொள்கிறார்கள்.
கொலைகாரமான ஃபைட்ஸ், இன்டென்ஸ் சஸ்பென்ஸ். அரை மணி நேர எபிசோட்கள் என்பதால் ஈஸியாக பிக் பண்ணலாம்.

3. The Beast in Me
Netflix – Psychological Thriller Series
ஒரு ரைட்டரின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றும் மர்மமான அண்டை வீட்டுக்காரர்.
ஹாரர் + சைக்கலாஜிக்கல் திரில்லர். போகப் போக இன்டென்ஸ் ஆகும் கதைக்களம்.

4. Playdate (Prime Video – Action Comedy Movie)
Reacher-ன் ஹீரோ Alan Ritchson நடிப்பில் வரும் லைட்-வெயிட் comedy-action திரைப்படம்.
இரண்டு அப்பாக்கள், குழந்தைகளுடன் ஒரு fun day enjoy பண்ணும் போது, எதிர்பாராத சூழ்நிலைகள் அவர்களை அபாயத்தில் தள்ளுகிறது.
5. A Merry Little Ex-Mas
Netflix – Christmas Romantic Comedy
விவாகரத்து ஆகப்போகும் கபில் ஒரு லாஸ்ட் கிறிஸ்துமஸை குடும்பமாகக் கொண்டாட முடிவு செய்கிறார்கள். அந்த festival season அவர்களின் முடிவை எப்படி மாற்றுகிறது என்பது கதையின் சுவை.



